கோலியும் காலி: இந்தியா மீண்டும் திணறல் பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.
கோலியும் காலி: இந்தியா மீண்டும் திணறல் பேட்டிங்


நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இஷான் கிஷன் மற்றும் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். டிரென்ட் போல்ட் முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து நெருக்கடியளித்தார். தனது அடுத்த ஓவரில் கிஷன் (4) விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் அடியைக் கொடுத்தார் போல்ட்.

அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருக்கக்கூடும். போல்ட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை தூக்கி அடிக்க முயற்சிக்க ஆடம் மில்ன் அந்த கேட்சைத் தவறவிட்டார். இதனால், ரோஹித் தப்பித்தார்.

இதன்பிறகு, மில்ன் வீசிய 5-வது ஓவரில் ராகுல் 1 பவுண்டரி, ரோஹித் 1 பவுண்டரி, சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் கிடைத்தன.

ஆனால், டிம் சௌதி வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் ராகுல் 18 ரன்களுக்கும், இஷ் சோதி வீசிய 8-வது ஓவரில் ரோஹித்தும் 14 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுக்க இந்திய அணி மீண்டும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்து திணறியது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் ரேட் 6-ஐ தாண்டவில்லை. படிப்படியாகக் குறைந்து ஓவருக்கு 4-ஐ எட்டியது ரன் ரேட்.

10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் ஆட்டத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் பந்திலேயே கோலி சிக்ஸர் அடிக்க முயன்று சோதி சுழலில் சிக்கினார். அவர் 17 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சற்று முன்பு வரை இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com