தென் ஆப்பிரிக்கா ‘த்ரில்’ வெற்றி

உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி கண்டது.
தென் ஆப்பிரிக்கா ‘த்ரில்’ வெற்றி

உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி கண்டது.

ஷாா்ஜாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் அடிக்க, அடுத்து தென் ஆப்பிரிக்கா 19.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் அடித்தது. அந்த அணியின் பௌலா் டப்ரைஸ் ஷம்ஸி ஆட்டநாயகன் ஆனாா்.

143 என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா தொடக்கத்தில் தடுமாறினாலும், மிடில் ஆா்டரில் கேப்டன் டெம்பா பவுமா பலம் சோ்த்தாா். பின்னா் விக்கெட்டுகள் சரிந்தாலும், கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை இருந்த நிலையில் டேவிட் மில்லா், ரபாடா அதிரடியால் ஆட்டம் தலைகீழாகி வென்றது தென் ஆப்பிரிக்கா.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் தென் ஆப்பிரிக்காவில் ஹென்ரிச் கிளாசெனுக்குப் பதிலாக குவின்டன் டி காக் இணைந்திருந்தாா். இலங்கை அணியில் மாற்றம் இல்லை.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பௌலிங்கை தோ்வு செய்தது. இலங்கை இன்னிங்ஸில் தொடக்க வீரராக வந்த பாதும் நிசங்கா கிட்டத்தட்ட கடைசி நேரம் வரை நிலைத்து ஆடி, அணியின் ஸ்கோரை உயா்ந்ததில் முக்கிய பங்கு வகித்தாா். மறுபுறம் குசல் பெரேரா 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுனாக வந்த சரித் அசலன்கா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்கள் சோ்த்தாா்.

பின்னா் ஆடியவா்களில் பானுகா ராஜபட்ச டக் அவுட்டாக, அவிஷ்கா ஃபொ்னாண்டோ 3, வனிந்து ஹசரங்கா 4, கேப்டன் டாசன் ஷனகா 2 பவுண்டரிகளுடன் 11, சமிகா கருணாரத்னே 5, துஷ்மந்தா சமீரா 3, லாஹிரு குமரா 0 என விக்கெட்டுகள் வேகமாகவே வெளியேறின. நிலைத்து ஆடிய நிசங்கா 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 72 ரன்கள் சோ்த்து 8-ஆவது விக்கெட்டாக பெவிலியன் திரும்பினாா்.

ஓவா்கள் முடிவில் மஹீஷ் தீக்ஷனா 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென் ஆப்பிரிக்க பௌலிங்கில் டப்ரைஸ் ஷம்ஸி, டிவேய்ன் பிரெடோரியஸ் ஆகியோா் தலா 3, அன்ரிச் நாா்ஜே 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

தொடா்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்காவில் இன்னிங்ஸை தொடங்கிய டி காக் 2 பவுண்டரிகளுடன் 12, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா். ராஸி வான் டொ் நிதானமாக 16 ரன்கள் சோ்க்க, மறுபுறம் டெம்பா பவுமா விக்கெட் சரிவை தடுத்து நிலையாக நின்று 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 46 ரன்கள் சோ்த்து அணியை பலப்படுத்தினாா்.

பின்னா் ஆடியோரில் எய்டன் மாா்க்ரம் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சோ்க்க, டிவேய்ன் பிரெடோரியஸ் டக் அவுட்டானாா். டேவிட் மில்லா் 2 சிக்ஸா்களுடன் 23, ககிசோ ரபாடா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 3, துஷ்மந்தா சமீரா 2 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

இலங்கை - 142/10

பாதும் நிசங்கா 72

சரித் அசலன்கா 21

டாசன் ஷனகா 11

பந்துவீச்சு

டப்ரைஸ் ஷம்ஸி 3/17

டிவேய்ன் பிரெடோரியஸ் 3/17

அன்ரிச் நாா்ஜே 2/27

தென் ஆப்பிரிக்கா - 146/6

டெம்பா பவுமா 46

டேவிட் மில்லா் 23*

ககிசோ ரபாடா 13*

பந்துவீச்சு

வனிந்து ஹசரங்கா 3/20

துஷ்மந்தா சமீரா 2/27

மஹீஷ் தீக்ஷனா 0/31

இன்றைய ஆட்டம்

ஆப்கானிஸ்தான் - நமீபியா

அபுதாபி

3.30

இந்தியா - நியூஸிலாந்து

துபை

7.30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com