மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி

அகீல் ஹுசைன் சிறப்பால் மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி
மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி

புராவிடென்ஸ்: டி20 உலகக் கோப்பை போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுக்க, உகாண்டா 12 ஓவர்களில் 39 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 44 ரன்கள் அடித்தார். பிராண்டன் கிங் 2 பவுண்டரிகளுடன் 13, நிகோலஸ் பூரன் 3 சிக்ஸர்களுடன் 22, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஓவர்கள் முடிவில் ஆண்ட்ரே ரஸ்ஸெல் 17 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 30, ரொமேரியோ ஷெப்பர்டு 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உகாண்டா பெüலர்களில் பிரையன் மசாபா 2, அல்பேஷ் ரம்ஜனி, காஸ்மஸ் கியெவுடா, தினேஷ் நக்ரனி ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 174 ரன்களை நோக்கி விளையாடிய உகாண்டா அணியில் அதிகபட்சமாக, லோயர் ஆர்டரில் வந்த ஜூமா மியாகி 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதர பேட்டர்களில், ரோஜர் முகாசா 0, சைமன் செசாஸி 4, ராபின்சன் ஒபுயா 6, அல்பேஷ் ரம்ஜனி 5, கென்னெத் வய்ஸ்வா 1 ரன்னுக்கு வீழ்ந்தனர்.

ரியாஸத் அலி ஷா 3, தினேஷ் நக்ரனி 0, கேப்டன் பிரையன் மசாபா 1, காஸ்மஸ் கியெவுடா 1, ஃபிராங்க் சுபாகா 0 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, உகாண்டா ஆட்டம் முடிவுக்கு வந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அகீல் ஹுசைன் 5, அல்ஜாரி ஜோசஃப் 2, ரொமேரியோ ஷெப்பர்டு, ஆண்ட்ரே, குடாகேஷ் மோட்டி ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

5/11

இந்த ஆட்டத்தின் நாயகனாகிய மேற்கிந்தியத் தீவுகள் அகீல் ஹுசைன், 11 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது கேரியர் பெஸ்ட் ஆகும். இதுவே, டி20 உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெளலர் ஒருவரின் பெஸ்ட்டும் கூட. இதற்கு முன், சாமுவெல் பத்ரீ (4/15 - 2014) அந்தப் பெருமையை பெற்றிருந்தார்.

39

இந்த ஆட்டத்தில் உகாண்டா பதிவு செய்த ஸ்கோரே (39), டி20 உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றில் ஒரு அணியின் மிகக் குறைந்த ஸ்கோராகும். இதற்கு முன் 2014}இல் இலங்கைக்கு எதிராக நெதர்லாந்தும் இதே ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com