சூப்பர் 8 சுற்றில் சவாலான ஸ்கோர்கள் குவிக்கப்படும்: தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்

சூப்பர் 8 சுற்றில் சவாலான ஸ்கோர்கள் குவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 சுற்றில் சவாலான ஸ்கோர்கள் குவிக்கப்படும்: தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்
படம் | AP

சூப்பர் 8 சுற்றில் சவாலான ஸ்கோர்கள் குவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக உருவாக்கப்பட்ட நியூயார்க் மைதானத்தின் ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் எடுக்க மிகக் கடினமானதாகவும் இருந்தது. பலரும் நியூயார்க் மைதானத்தின் ஆடுகளங்களை கடுமையாக விமர்சித்தனர்.

ககிசோ ரபாடா
ககிசோ ரபாடாபடம் | AP

இந்த நிலையில், சூப்பர் 8 சுற்றுகள் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்களில் நடைபெறுவதால் சவாலான ஸ்கோர்கள் குவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

சூப்பர் 8 சுற்றில் சவாலான ஸ்கோர்கள் குவிக்கப்படும்: தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதில் மகிழ்ச்சி, ஆனால்... என்ன சொல்கிறார் ஆப்கன் பயிற்சியாளர்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூயார்க் ஆடுகளங்களில் ரன்கள் குவிப்பது பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருந்தது. ஆனால், சூப்பர் 8 சுற்றுகள் முழுவதும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுவதால் அதிக அளவிலான ஸ்கோர்கள் குவிக்கப்படும் என நினைக்கிறேன். பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என இருவருக்குமே ஆடுகளங்கள் ஏற்றதாக இருக்க வேண்டும். அப்படி இருப்பது மிகவும் முக்கியம். அப்படி இல்லாத பட்சத்தில் நாம் அதனை பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம் அல்லது பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் எனக் கூறிவிடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com