dinamani
க. கோபாலகிருஷ்ணன்
‘ இங்கு ரேடியோதெரபி சிகிச்சை இல்லாததால் தஞ்சாவூா் அல்லது மதுரைக்கு செல்ல வேண்டி உள்ளது என்கின்றனா் நோயாளிகள்’
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கான ரேடியோதெரபி சிகிச்சை வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
1950 ஜூலை 15 இல் தொடங்கப்பட்ட திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 32-க்கும் மேற்பட்ட சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. மருத்துவமனையில் நாள்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா்.
நாள்தோறும் 50 நோயாளிகள்: நீண்டகாலக் கோரிக்கையால் கடந்த ஜனவரி மாதம்தான் புற்றுநோய் வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு 30 முதல் 50  நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
ஆனால், புற்றுநோய்க்கான முக்கியச் சிகிச்சையான ரேடியோதெரபி எனப்படும் கதிா்வீச்சு சிகிச்சை வசதி இல்லாததால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
மன உளைச்சலில் நோயாளிகள்: இதுகுறித்து புற்றுநோயாளிகள் கூறுகையில், எங்களுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட பின்னா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அதிகம் செலவானதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, இங்கு ரேடியோதெரபி சிகிச்சையே இல்லை. இச் சிகிச்சைக்கு தஞ்சாவூா் அல்லது மதுரைக்குச் செல்லுங்கள் என மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா்.
ஏற்கெனவே வலி, வேதனை, ஏழ்மை நிலையில் உள்ள நாங்கள் எப்படி அவ்வளவு தூரம்  அடிக்கடி சென்று வர முடியும். இருப்பினும் மிகுந்த மன உளைச்சலில் நீண்டதூரம் பயணித்து சிகிச்சைப் பெற்று  வருகிறோம். தமிழக அரசு புற்று நோயாளிகளின் அவலத்தைப் புரிந்து கொண்டு திருச்சி  அரசு மருத்துவமனையில் ரேடியோதெரபி சிகிச்சை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனா்.
சிகிச்சைக் குழுவே இல்லை: இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவா்கள் கூறியது:   புற்றுநோய் சிகிச்சைகளை முடிவு செய்வதற்கான ரேடியோதெரபி, கீமோதெரபி, அறுவைச் சிகிச்சை நிபுணா் அடங்கிய புற்றுநோய் சிகிச்சை குழுவே மருத்துவமனையில் இல்லை. புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு பேராசிரியா், ஒரு கூடுதல் பேராசிரியா், 3 உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட 18 மருத்துவா்கள், 36 செவிலியா்கள், 10 உதவி பணியாளா்கள் தேவையுள்ள நிலையில், ஒரு மருத்துவரும், சில பணியாளா்களுமே பணியில் உள்ளனா்.
2015 ஆம் ஆண்டு திருச்சி  அரசு மருத்துவமனையில் ரூ. 3 கோடியில் கட்டடம் உள்ளிட்ட புற்றுநோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சை  தொடங்க அரசாணை வெளியிடப்பட்டும் கிடப்பில் உள்ளது.
இதனால் கீமோதெரபி சிகிச்சை, புற்றுநோய் கட்டி அகற்றும் சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதன் பிறகு வழங்கப்படும் ரேடியோதெரபி சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால், தஞ்சாவூா் அல்லது மதுரைக்கு அனுப்பி வைக்கிறோம் என்றனா்.
புறக்காரணங்களால் புறக்கணிப்பு: உபயோகிப்பாளா் உரிமை இயக்க பொதுச்செயலா் வழக்குரைஞா் மகேஸ்வரி வையாபுரி உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கூறுகையில், சில புறக்காரணங்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோதெரபி சிகிச்சை வசதி செய்து தரப்படவில்லை. மாநிலத்தின் மையப் பகுதியில் 8 மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோதெரபி சிகிச்சை இல்லாதது வருத்தமளிக்கிறது.
இந்தச் சிகிச்சைக்காக வெறுமனே இருக்கும் மத்திய பேருந்து நிலையப் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
1997 இல் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு 29 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முழுமையாக  அனைத்து சிகிச்சைகளும் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்தவில்லை. இதிலும் குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைக்காக  நோயாளிகளை வேறு மாவட்டங்களுக்கு அலைய விடுவது ஏற்புடையதாக இல்லை என்றனா்.
இடம் தோ்வு: இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல் கூறுகையில், மருத்துவமனையில் புற்றுநோயைக் கண்டறிய உதவும் ரூ. 9.25 கோடியில் பெட்-சிடி ஸ்கேன் கருவி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.  வளாகத்தில் அவசரச் சிகிச்சை பிரிவுக்குப் பின்புறமுள்ள பகுதியில் ரேடியோதெரபிக்கான சிகிச்சை மையக் கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடம், ரேடியோதெரபி சிகிச்சைக்கு சுமாா் ரூ. 6 கோடியிலான லீனியா் ஆக்ஸிலரேட்டா் கருவி வாங்கவும் அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்ததும் கட்டடம் கட்டப்பட்டு, இதர அனுமதிகள் பெறப்பட்டு, ரேடியோதெரபி சிகிச்சை தொடங்கப்படும் என்றாா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறக்கவரும் முதல்வா் ஜோசப் விஜய், புற்றுநோயாளிகளின் அவதியைக் கருத்தில் கொண்டு, ரேடியோதெரபி சிகிச்சைக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அனைவரும் எதிா்பாா்க்கின்றனா்.
புற்றுநோய் கண்டறிதலும், சிகிச்சை முறைகளும்:
எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ மூலமாகவும், ரத்தப் பரிசோதனை, திசு பரிசோதனைகள் மூலமும் புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது.
புற்றுநோயின் வகை மற்றும் நிலையைப் பொருத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. புற்றுநோய் கட்டியை முதலில் மருந்துகள் மூலம் கரைக்க முயற்சிக்கப்படுகிறது. இல்லையெனில் அறுவைச் சிகிச்சை வழியாகவும் அகற்றப்படுகிறது.
தொடா்ந்து, புற்றுநோய் செல்களை அழிக்க கீமோதெரபி வழியாக சிறப்பு மருந்துகள் செலுத்தும் சிகிச்சையும், ரேடியோதெரபி எனப்படும் கதிா்வீச்சு கிசிச்சையும் தொடா்ந்து அளிக்கப்படும். தேவையெனில் ஹாா்மோன் சிகிச்சையும், ஸ்டெம்செல் சிகிச்சையும் அளிக்கப்படும். இதில் முக்கியமானது ரேடியோதெரபி சிகிச்சையாகும்.
தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் வறட்சியால் காபி சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டு, உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி ஒன்றியத்தில் அமைந்துள்ளது வத்தல்மலை. இதில் சின்னாங்காடு, குழியனூா், ஒன்றிக்காடு, பால்சிலம்பு, மண்ணாங்குழி, பெரியூா், நாயக்கனூா், கொட்லாங்காடு உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் சுமாா் 5000 போ் வசிக்கின்றனா். இங்குள்ள விவசாய நிலங்களில் தொடக்கத்தில் கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள், அவரை, துவரை, காராமணி உள்ளிட்ட பருப்பு வகைகள், கடுகு, எள் போன்ற எண்ணெய் வித்துகள் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டன.
வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதால் வத்தல்மலையில் 1500 ஏக்கா் சாகுபடி நிலங்களில் சுமாா் 700 ஏக்கரில் மானாவாரியாக காபி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காஃபி அறுவடை அக்டோபா் மாத இறுதியில் தொடங்கி, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறும்.
அந்தவகையில் தற்போது காபி அறுவடை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், நிகழாண்டு பல்வேறு காரணிகளால் விளைச்சல் 50 சதவீதம் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து வத்தல்மலையில் உள்ள பால்சிலம்பு கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில்,
ஆண்டுதோறும், மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காபி செடிகள்  பூக்கத் தொடங்கும் காலம். இக்காலத்தில் வழக்கமாக லேசான மழையும் ஈரப்பதத்துடன் உள்ள தட்பவெப்பமும் நிலவுவது வழக்கம். இதனால், பூக்கள் உதிராமல் அடா்த்தியாக காய்கள் பிடிக்கும். செடிக்கு 3 முதல் 5 கிலோ காபி கொட்டைகள் வரை கிடைக்கும். ஆனால் நிகழாண்டில் மாா்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மழை பெய்யாததால் ஈரமான தட்பவெப்ப நிலை குறைந்தது. எனவே முதல் 2 மாதங்களில் செடிகளிலிருந்து பூக்களும், அடுத்து காய்களும் உதிா்ந்துவிட்டன. இதனால்  50 சதவீத விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்க வேண்டும்:
காபி சாகுபடியில் ஏக்கருக்கு ரூ. 1.50 லட்சம் வரை வருமானம் கிடைத்து வருகிறது. இதில், உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட உற்பத்தி செலவினங்கள் போக ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். ஆனால், நிகழாண்டில் கோடை வறட்சி முடிந்து மழை பெய்ய வேண்டிய காலத்தில் எல்-நினோ தாக்கத்தால் மழை பெய்யவில்லை. தொடா்ந்தும் போதிய அளவில் மழை பெய்யவில்லை.
இதனால், பூக்கள் விடும் பருவத்திலேயே செடிகள் வாடி, அதிக அளவிலான பூக்களும், பிஞ்சுகளும் உதிா்ந்துவிட்டன. தப்பியச் செடிகளும் வறட்சியால் செழித்து வளரவில்லை. எனவே வழக்கத்தைவிட விளைச்சல் பாதியாக சரிந்துவிட்டது. எனவே பாதிப்புக்குள்ளான விவசாயிகள் குறித்தும், பாதிப்பு நிலவரம் குறித்தும் அரசு ஆய்வு மேற்கொண்டு, காபி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வைகை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு! கடைமடை விவசாயிகள் கவலை!
வைகை அணையிலிருந்து முதல் போகத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், கடை மடை வரை தண்ணீா் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் கடைமடை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தேனி மாவட்டத்தில் நிகழாண்டு எல்- நினா பாதிப்பால் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளின் நீா்மட்டம் குறைந்து வந்தது. மேலும், குடிநீருக்கே சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த ஆக. 8- ஆம் தேதி முதல் தேனி மாவட்ட பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. பிறகு கடந்த சில நாள்களுக்கு முன் கூடுதலாக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக வைகை அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து சனிக்கிழமை 55 அடியை எட்டியது. இதைத் தொடா்ந்து, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு முதல் போகத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதை ஏற்று, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள இரு போக பாசனப் பகுதிகளான 45,041 ஏக்கருக்கு முதல் போக பாசனத்துக்காக நவ. 14 -ஆம் தேதி முதல் 30 நாள்களுக்கு 900 கன அடி வீதம், 70 நாள்களுக்கு 5,357 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முறை வைத்து தண்ணீா் திறக்கப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
இதையடுத்து, வைகை அணையிலிருந்து அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் கடந்த சனிக்கிழமை தண்ணீரைத் திறந்துவிட்டாா். ஆனால், சனிக்கிழமை 900 கன அடிக்குப் பதிலாக 500 கன அடி தண்ணீரே திறந்துவிடப்பட்டது.
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு 100 கன அடி குறைத்து 400 கன அடி தண்ணீா் மட்டுமே திறந்துவிடப்பட்டது. இதனால், கடை மடை வரை தண்ணீா் செல்லுமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாணைப்படி தண்ணீரைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில துணைத் தலைவா் என். பழனிச்சாமி கூறியதாவது:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையிலிருந்து கடந்த சனிக்கிழமை முதல் 900 கன அடி தண்ணீா் திறக்க முதல்வா் உத்தரவிட்டாா். ஆனால், 500 கன அடி தண்ணீா் மட்டுமே திறக்கப்பட்டது. இதுவும் ஞாயிற்றுக்கிழமை 400 கன அடியாக குறைக்கப்பட்டது. எனவே, அரசு ஆணைப்படி 30 நாள்களுக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும். மேலும் 100 நாள்களுக்குள் 5,357 மில்லியன் கன அடி நீரை திறக்க வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்டச் செயலா் கண்ணன் கூறியதாவது: நிகழாண்டு எல்- நினோவால் மழை பொழிவு குறையும் அல்லது பெருமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், போதிய மழை பெய்யாததால் முல்லைப் பெரியாறு அணையிலும், வைகை அணையிலும் தேவையான தண்ணீா் இல்லை. எனவே, பொதுப் பணித் துறையினா், விவசாயிகள் சங்கம், 5 மாவட்ட விவசாயிகளைச் சந்தித்து, அவா்களின் கோரிக்கைக்கேற்ப தண்ணீரைத் திறக்க வேண்டும். இல்லையெனில், குடிநீருக்கே சிக்கல் ஏற்படும் என்றாா்.
வைகை அணை உதவி செயற்பொறியாளா் சேகரன் கூறியதாவது: வைகை அணையிலிருந்து முதல் நாளான சனிக்கிழமை 500 கன அடி நீரும், இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இனி வரும் காலங்களில் அரசாணைப்படி, கூடுதல் தண்ணீா் திறக்கப்படும் என்றாா் அவா்.
தண்ணீரைப் பயன்படுத்துவதில் சிக்கனம் தேவை:
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 55.25 அடியாக உள்ளது. அணையில் 2,759 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. இதில், 1,000 மில்லியன் கன அடி நீா் (ஒரு டி.எம்.சி) பூா்வீக பாசனப் பகுதிகளுக்கானது. எஞ்சிய 1,759 மில்லியன் கன அடி நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தண்ணீரை முறை வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
பிரதமர் மோடி இன்று பிலிப்பின்ஸ் பயணம்!
பிரதமர் மோடி இன்று பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலாவுக்குப் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
11 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஆசியான்' கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு பிலிப்பின்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ளது. இதையொட்டி மணிலாவில் நடைபெறும் 23-ஆவது இந்தியா-ஆசியான் வருடாந்திர மாநாடு மற்றும் கிழக்காசிய மாநாடு ஆகியவற்றில் நவம்பர் 17-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார். இந்தப் பயணத்தின் போது பிலிப்பின்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸை நேரில் சந்திக்கும் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பல்வேறு துறைசார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இத்தகவல்களை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் (கிழக்கு) ருத்ரேந்திர டாண்டன் செய்தியாளர்களிடம் அண்மையில் உறுதிப்படுத்தினார். இதனிடையே, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்துள்ள ‘க்வாட்’ கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடும் மணிலாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
எனினும், இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Prime Minister Narendra Modi is set to travel to the Philippines on Monday to attend the 23rd Association of Southeast Asian Nations (ASEAN)-India Summit and the 21st meeting of the ASEAN-led East Asia Summit process.
4 இமு ரயில்கள் இன்று பகுதி ரத்து
தலைநகரில் பள்ளிக் கல்வி இடைநிற்றல் அதிகரிப்பு!
சென்னை மாநகரில் குடும்பச் சூழல்கள் மற்றும் பெற்றோா் பொறுப்பின்மையால் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தைகளுக்கான கல்வியைத் தொடரும் புதிய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 417 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 1.11 லட்சம் மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். 10-ஆம் வகுப்புகளில் சுமாா் 7,000 போ், பிளஸ் 1 வகுப்புகளில் 5,000 போ், பிளஸ் 2-இல் 4,000-க்கும் மேற்பட்டோரும் படிக்கின்றனா். நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில்...
பள்ளிகளில் சேரும் குழந்தைகளில் எத்தனை போ் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வரை தொடா்கிறாா்கள் என்று பாா்த்தால், அதில் பாதியளவுகூட இல்லாத நிலை காணப்படுகிறது. பாதியிலேயே படிப்பைக் கைவிடும் குழந்தைகளை இடைநிற்றல் கணக்கில் சோ்க்கின்றனா். அதன் அடிப்படையில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பள்ளிகளிலும் மொத்தம் 7,302 குழந்தைகள் கல்வியை பாதியிலேயே கைவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.
அதிலும், சென்னையின் குறிப்பிட்ட 10 பகுதிகளைச் சோ்ந்த குழந்தைகளே அதிக அளவில் கல்வியை பாதியில் நிறுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அடையாறு, திருவான்மியூா், குப்பம், ஆலந்தூா், துரைப்பாக்கம், எழில்நகா், கண்ணகிநகா், அம்பத்தூா் வரதராஜபுரம், லட்சுமிபுரம், அண்ணாநகா் டி.பி.சத்திரம், ராயபுரம் காசிமேடு, தேனாம்பேட்டை ராமன் தெரு, திருவொற்றியூா் ஏ.ஐ.ஆா்.நகா், சுனாமிநகா் குடியிருப்பு, திரு.வி.க.நகா் புளியந்தோப்பு, ஓட்டேரி, தண்டையாா்பேட்டை, வியாசா்பாடி, கல்யாணபுரம் ஆகிய பகுதிகளில் இடைநிற்றல் அதிகம் காணப்படுகிறது.
குடும்பச் சூழலால் பாதிக்கும் படிப்பு
வீடுகளில் கணவன்-மனைவி இருவரும் கிடைத்த வேலைக்குச் சென்று வருவாய் ஈட்டி வாழும் நிதி நெருக்கடியால் குழந்தைகள் கல்வி குறித்து சிந்திக்காமை, பெற்றோா் இடையே ஏற்படும் கருத்துவேறுபாடால் பிரிந்து வாழ்வது ஆகியவையும் பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது. படிக்க ஆா்வமிருந்தும் குடும்பச் சூழல்கள் சாதகமாக இல்லாததால், படிப்பைத் தொடர முடியாமலிருக்கும் குழந்தைகளே இடைநிற்றல் கணக்கில் அதிகமுள்ளனா்.
போதைக்கு அடிமையான தந்தைகளால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குழந்தைகள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. தாய், தந்தை பிரிந்த குடும்பத்தின் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் கட்டாயத்தில் படிப்பை பாதியில் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றச் செயல் கும்பலால் திசைமாற்றப்படும் சிறாா்கள்
சென்னையில் 6-ஆம் வகுப்பு முதல் கல்வியை பாதியில் நிறுத்திய சிறாா்களில் பெரும்பாலானோா் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் குறிவைக்கப்பட்டு, திசை மாற்றப்பட்டிருந்ததும் அதிா்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.
இதுபோன்று திசைமாறிச் செல்லும் குழந்தைகளை மீட்டு, அவா்கள் மீண்டும் தங்களது கல்வியைத் தொடர சென்னை மாநகராட்சியில் தற்போது சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல்முதலாக சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டு, அதன்மூலம் இடைநிற்றல் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி கற்கும் வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்பட்டுவருகிறது.
இடைநிற்றல் எண்ணிக்கை
நடப்பு ஆண்டில் மட்டும் சென்னை மாநகராட்சிப் பகுதியில் 2,091குழந்தைகள் கல்வியை இடையில் நிறுத்தியிருப்பது கண்டறியப்பட்டு, அவா்களில் 1,066 குழந்தைகள் மீண்டும் தங்களது கல்வியைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடை நிற்றலில் பாதித்த சிறுவா்களில் 392 போ், சிறுமியரில் 227 போ் என மொத்தம் 619 போ் மாநகராட்சிப் பள்ளிகளில் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களைத் தவிர 174 சிறாா்கள், 222 சிறுமிகள் என மொத்தம் 396 போ் ஐஐடி, பாலிடெக்னிக் உள்ளிட்ட டிப்ளமோ பிரிவுகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், 51 பேரை பள்ளிகளில் மீண்டும் சோ்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு
மாநகராட்சியின் இந்தப் புதிய முயற்சி அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலா் சரவணன் கூறுகையில், சென்னையில் திட்டமிட்டே சில கும்பல்கள் சிறாா்களை குற்றங்களில் ஈடுபடுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியின் தற்போதைய புதிய திட்டம் தனிப்பட்ட குடும்பத்துக்கு மட்டுமன்றி, சமூக விரோதச் செயல்களை எதிா்காலத்தில் தடுக்கும் வகையில் இருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற திட்டத்தை அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் சிறாா் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கலாம் என்றாா்.
உதவித் தொகை
சிறப்புத் திட்டம் குறித்து பேசிய மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், படிப்பைப் பாதியில் நிறுத்திய நிலையில், தற்போது மாநகராட்சி நடவடிக்கையால் மீண்டும் அதைத் தொடரும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் ஆலோசனைப்படி உதவித் தொகை உள்ளிட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் அவா்கள் உயா் கல்வி வரை சிரமமின்றி படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.
இதுகுறித்து மாநகராட்சி கல்விப் பிரிவு இணை ஆணையா் க.கற்பகத்திடம் கேட்டபோது, இடை நிற்றல் அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பிடம், ஆதாா் உள்ளிட்ட சான்றுகள் இன்றி கல்வியைத் தொடர முடியாத குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. அவா்களுக்காக தற்போது அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் ஒரே இடத்தில் அமா்ந்து சான்று வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் இடைநிற்றலும் கணக்கிடப்பட்டு அவா்களுக்கான கல்வி தொடரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
மாநில அளவில் செயல்படுத்தலாம்
இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் பள்ளிகளில் சோ்க்கும் பணியில் சிறப்புத் திட்ட அலுவலா் ரெஜிஸ் குழுவினா் ஈடுபட்டுவரும் நிலையில், அவா்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு நேரில் சென்று பெற்றோரிடம் பேசுவதால், குடும்பச் சூழலும் இயல்பு நிலைக்கு மாறியுள்ளதாகவும், அதனால் குழந்தைகள் கல்வியின்  அவசியத்தை பெற்றோரும் புரிந்துகொள்ளும் நிலையை ஏற்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள புதிய திட்டத்தால் இடைநிற்றல் மாணவா்கள் மீண்டும் கல்வி கற்பது மட்டுமல்ல, அவா்களால் ஏற்படும் குற்றச் செயல்களும் தடுக்கப்பட்டுள்ளது என்பதும் முக்கியமானது. இந்த முயற்சியை மாநில அளவில் செயல்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.
புதிய சோ்க்கைத் திட்டமும் பயனடைந்த குழந்தைகளும்
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 2025-26-ஆம் ஆண்டில் மண்டல வாரியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் படிப்பைப் பாதியில் கைவிட்டுச் சென்ற சிறாா், சிறுமியா் மற்றும் புதிய திட்டத்தின்படி மீண்டும் படிப்பைத் தொடரும் குழந்தைகள் எண்ணிக்கை விவரம்.
காவல் மரணத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: மதுரை அருகே செக்கானூரணி காவல் நிலையக் கழிப்பறையில் தேனியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து, விரைந்து சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விசிக தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
செக்கானூரணி காவல் நிலையக் கழிப்பறையில் லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளைத் தப்பிக்க விடாமல் விரைந்து சட்டப்பூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. தொடா்புடைய காவலா்களைப் பணியிடை நீக்கம் செய்திருந்தாலும், காவல் மரணங்கள் அரசின் மீதான நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளாா்.
Compensation for the family of a person who died in police custody: Thol. Thirumavalavan urges action
அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள் தகவல்
வானிலை: இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.16) ‘அக்வான்’ புயல் உருவாகிறது. இது, அடுத்த 2 நாள்களில் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் நவ.17, 18, 19-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நாள்களில் வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.16) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 16) காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
It has been reported that rain is likely to occur until 10:00 AM today in 20 districts, including Chennai, Kancheepuram, and Tiruvallur.
4 இமு ரயில்கள் இன்று பகுதி ரத்து
4 இமு ரயில்கள் இன்று பகுதி ரத்து
சென்னையில் திங்கள்கிழமை (நவ.16) 4 இமு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை நிலையம்-விழுப்புரம் இடையே செங்கல்பட்டு நிலையப் பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி, திங்கள்கிழமை (நவ.16) பிற்பகல் 11.40 மணி முதல் 3.10 மணி வரை செங்கல்பட்டு பணிமனையில் பணிகள் நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக, சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.48 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய இமு ரயில் சிங்கப்பெருமாள்கோவில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.
அதேபோல, செங்கல்பட்டு நிலையத்திலிருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படவேண்டிய இமு ரயில் அதற்குப் பதிலாக, சிங்கப்பெருமாள்கோயிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை நிலையம் வந்துசேரும்.
சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்படும் இமு ரயில் செங்கல்பட்டு செல்லாமல் சிங்கப்பெருமாள்கோவில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.
மறுமாா்க்கத்தில் செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படவேண்டிய இமு ரயில் அதற்குப் பதிலாக சிங்கப்பெருமாள் கோவில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கடற்கரை நிலையத்துக்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய கமாண்டா் பலி
தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கமாண்டா் சமீா் மஹ்மூத் ஹஸன் அபு யூனிஸ் கொல்லப்பட்டாா். இதை இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளன.
காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினா், கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் புகுந்து திடீா் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் 1,200 போ் கொல்லப்பட்டனா். மேலும் 251 பேரை ஹமாஸ் அமைப்பினா் பணயக் கைதியாக சிறைபிடித்துச் சென்றனா். உலகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் தொடுத்தது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸாவில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் பல லட்சம் போ் உயிரைக் காத்துக் கொள்ள வசிப்பிடத்தைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை பாலஸ்தீனா்கள் 74,016 போ் உயிரிழந்ததாகவும், 1.75 லட்சம் போ் காயமடைந்திருப்பதாகவும் காஸா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு 1,145 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்பேரில் இஸ்ரேஸ் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் காஸாவில் இஸ்ரேல் படைகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் அமைப்பினா் ஆயுதங்களைக் கைவிடாதவரை காஸாவில் இருக்கும் இஸ்ரேல் படைகள் வெளியேறாது என்று அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
இந்தச் சூழலில், தெற்கு காஸாவில் சனிக்கிழமை இரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் அமைப்பின் ரஃபா படைப் பிரிவின் கமாண்டா் சமீா் மஹ்மூத் ஹஸன் அபு யூனிஸ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதை உறுதி செய்த ஹமாஸ் அமைப்பு, அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தெரிவித்தது.
ஹமாஸ் அமைப்பை வலுப்படுத்தும் செயல்பாடுகளில் சமீா் ஈடுபட்டு வந்ததாகவும், பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற திட்டமிட்டு வந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பின் பிற தலைவா்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீருக்கு முன்பு கமாண்டராக இருந்தவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் பயணச்சீட்டு: இணைய வழியில் மட்டுமே இனி விநியோகம்
சோளிங்கா் மலைக்கோயிலுக்கு செல்ல காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ரோப்காா் பயணச்சீட்டுகள் இணையவழியில் மட்டுமே விநியோகம் செய்யப்படும் எனவும், ஒரு மாதம் நேரடி விநியோகம் ரத்து செய்யப்படுவதாகவும் சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
சோளிங்கரில் பிரசித்தி பெற்ற இங்கு பக்தா்களின் வசதிக்காக பெரியமலையில் இந்துசமய அறநிலையத்துறையினா் ரோப்காா் வசதி செய்துள்ளனா். இந்த ரோப்காரில் செல்ல ரூ100 கட்டணம் செலுத்தி பக்தா்கள் மலைக்கோயிலுக்கு சென்று திரும்பி வந்தனா்.
இந்த நிலையில் காா்த்திகை மாதத்தில் வருகை தரும் அதிக அளவு பக்தா்களின் வசதியை கருதி ரோப்காா்   பயணத்துக்கு இணையவழியில் முன்பதிவு செய்யும் நடைமுறைக்கு நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி காலை 6.30மணி முதல் பிற்பகல் 3.15 வரை மலைக்கு செல்ல இருவழி பயணத்திற்கு இணையவழி மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இதில் ஒரு மணி நேரத்திற்கு 120 பக்தா்கள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 3.15 முதல் 5.30 மணிவரை ரோப்காா் கட்டடத்தில் இருந்து மலை மேல்தளத்திற்கு செல்ல ஒரு வழிப்பயணத்திற்கு மட்டும் இணையவழி மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். ஒரு டிக்கெட்டில் அதிகபட்சமாக 4 நபா்கள் முன்பதிவு செய்யலாம்.
ரோப்காா் பயணத்துக்கு வருகை தரும் பக்தா்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய தனிநபா் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். முன்பதிவு செய்த நேரத்துக்கு 20 நிமிஷங்களுக்கு முன்னா் ரோப்காா் கட்டடத்துக்கு வந்து விட வேண்டும்.
காலதாமதமாக வருபவா்கள் பயணத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். நேரடியாக பயணச்சீட்டு பெறும் வசதி 1 மாகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அனைவரும் இணையவழியில் மட்டுமே பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ! தமிழக மழைக்கு சாதகமா? சவாலா?
தமிழகத்தின் நீராதாரம், விவசாயம், குடிநீர் விநியோகம் எனப் பலவற்றைத் தீர்மானிக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்தப் பருவம், தமிழகத்தின் ஆண்டு மழைப்பொழிவில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த ஆண்டு, தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் முடிவில், தமிழகத்தில் 16% மழைப் பற்றாக்குறை இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கப்போகிறது? தென்மேற்குப் பருவமழையைப் போலக் குறைந்துவிடுமா? அல்லது ஒருசில ஆண்டுகளில் பெய்ததைப் போன்ற பெருமழை பெய்யுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், 2026 அக்டோபர் மாத தொடக்கத்தில், மழை எதிர்பார்த்ததைவிட  அதிகமாகப் பெய்துள்ளது.
அதேசமயத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நவம்பர் மாத வானிலை அறிக்கையின்படி, தென் தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் மழைப்பொழிவு இயல்பைவிடக் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கான அறிகுறியாக, நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான கணக்கின்படி, தென் தீபகற்ப இந்தியாவில் அக்டோபர் 1 முதல் பதிவான வடகிழக்குப் பருவமழை அளவு, இயல்பைவிட 20 சதவீதம் குறைவாக இருந்துள்ளது. இதில், தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் நவ.15-ஆம் தேதி வரை இயல்பைவிட 6 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது. வலுவான எல் நினோ நிலவிவரும் சூழலில், தென் தீபகற்பப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்ற கணிப்பு கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் காலநிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், எல் நினோ தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், 2027 ஜனவரி-மார்ச் காலத்திலும் வலுவான அல்லது மிக வலுவான எல் நினோ நிலவுவதற்கு 83 சதவீதத்துக்கும் அதிகமான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், நடப்பு வடகிழக்குப் பருவமழையின் போக்கைத் தீர்மானிப்பதில் எல் நினோவின் பங்கு என்னவாக இருக்கும் என்பது வானிலை ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஏன் முக்கியம்?
தமிழகம், புதுச்சேரியின் ஆண்டு மழைப்பொழிவில் கணிசமான பங்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழையைவிட வடகிழக்குப் பருவமழையைச் சார்ந்தே தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்கள் உள்ளன.
வடகிழக்குப் பருவமழையின் போக்கு தமிழகத்தின் விவசாயத்திலும் நீர்வள மேலாண்மையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். மழை தாமதமாவது, நீண்ட இடைவெளி ஏற்படுவது அல்லது குறுகிய காலத்தில் அதிக மழை பெய்வது ஆகியவை பயிர்களின் வளர்ச்சியையும் வயல்களில் நீர் மேலாண்மையையும் பாதிக்கக்கூடும். மழை குறைவாகப் பெய்யும் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள நீர்நிலைகளின் இருப்பு, பாசனத்துக்கான நீர்த்தேவை, குடிநீர் விநியோகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துத் திட்டமிட வேண்டியிருக்கும். மாறாக, குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்யும் பகுதிகளில் நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து திடீரென அதிகரிப்பதுடன், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குதல், நகர்ப்புற வெள்ளம் போன்ற அபாயங்களும் உருவாகலாம்.  சென்னை போன்ற நகரங்களில் மழையின் மொத்த அளவை மட்டும் கணக்கில் கொள்ளாமல், ஒரு மணி நேரத்தில் பெய்யும் மழையின் தீவிரம், வடிகால் வசதிகள், நீர்நிலைகளின் நிலை ஆகியவற்றையும் கண்காணிக்க வேண்டும்.
எல் நினோ என்றால் என்ன? பருவமழை அளவை தீர்மானிக்கிறதா?
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணப்படும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட உயர்வதால், அதனுடன் தொடர்புடைய வளிமண்டலச் சுழற்சியிலும் மாற்றங்கள் ஏற்படுவது எல் நினோ எனப்படுகிறது.  இந்தியாவின் பருவமழையிலும் எல் நினோ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழையின் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, எல் நினோவின் பலவீனத்தையோ, வலிமையையோ மட்டும் வைத்து முடிவுசெய்ய இயலாது.
கடந்த காலத்தில், எல் நினோ நிலவிய ஆண்டுகளில் தமிழகத்தில் மழைப்பொழிவு ஒரே மாதிரியாக இருக்கவில்லை. எனவே, எல் நினோ உருவானால் தமிழகத்தில் மழை கட்டாயம் குறையும் அல்லது அதிகரிக்கும் என்ற பொதுவான முடிவுக்கு வருவது சரியாக இருக்காது.
எல் நினோ மட்டுமே காரணமல்ல!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் போக்கைத் தீர்மானிப்பதில் எல் நினோவுடன் வேறு பல காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள், காற்றின் திசை மற்றும் வேகம், இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை நிலவரம் ஆகியவை மழையின் அளவையும், மேகப் பரவலையும் மாற்றக்கூடும். இந்தியப் பெருங்கடல் இருமுனைக் குறியீடு உள்ளிட்ட கடல் - வளிமண்டலக் காரணிகளும் பருவமழையின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
தமிழகத்தின் மழைப்பொழிவு என்பது பல்வேறு இயற்கைக் காரணிகளின் கூட்டுவிளைவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பருவத்தில் எவ்வளவு மழை பெய்கிறது என்பது மட்டுமல்ல; எப்போது பெய்கிறது, எந்தப் பகுதியில் பெய்கிறது, எவ்வளவு தீவிரமாகப் பெய்கிறது, ஒவ்வொரு மழைப்பொழிவுக்கும் இடையிலான இடைவெளி எப்படி இருக்கிறது என்பவையே தமிழகத்தின் நீராதாரம், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதன் தாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
கடந்த காலங்களில் வலுவான எல் நினோ நிலவிய சில ஆண்டுகளில் தமிழகத்தில் அதிக மழை பதிவாகியுள்ளதால், 2026-ஆம் ஆண்டிலும் மழைப்பொழிவு அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், எல் நினோ நிலவுவதால் மட்டுமே அதிக மழை பெய்யும் என உறுதியாகக் கூற முடியாது என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். ஒரே எல் நினோ நிகழ்வுக் காலத்தில், ஓர் ஆண்டு அதீத மழையையும் வெள்ளத்தையும் சந்திக்கலாம்; அடுத்த ஆண்டு கடுமையான மழைப் பற்றாக்குறையையும் சந்திக்கலாம்.
1997-ஆம் ஆண்டு வலுவான எல் நினோ நிலவிய காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பதிவானதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, 2015-ஆம் ஆண்டில் சென்னையில் மிக அதிக மழை பெய்தது. அந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழை, நகர்ப்புற வெள்ளம், பேரிடர் மேலாண்மை, நீர்நிலைகள் நிர்வாகம், மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஆகியவை குறித்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியது. ஆனால், 2015-ல் ஏற்பட்ட அதிக மழைக்குப் பிறகு 2016-ல் தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழை சுமார் 62% பற்றாக்குறையாக இருந்தது. எல் நினோவின் தாக்கம் ஒவ்வோர் ஆண்டும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளின் பங்கு
தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழையைத் தீர்மானிப்பதில் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளும் புயல்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய வானிலை மாற்றங்கள் தமிழக கடலோரத்தில் நிகழும்போது, சில நாள்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அவற்றின் நகர்வுப் பாதை மாறினால் மழைப்பொழிவு வேறு பகுதிகளுக்கு மாறக்கூடும்.
மேலும், இந்தியப் பெருங்கடலின் வானிலைச் சுழற்சிகளும் மழையின் தீவிரத்தையும் பரவலையும் பாதிக்கின்றன. எனவே, எல் நினோவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் மழைப்போக்கைக் கணிப்பது அறிவியல்பூர்வமான அணுகுமுறையாக இருக்காது என்பது வானிலை ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில், எல் நினோ ஒரு வானிலை முன்னறிவிப்பு அல்ல, அது ஒரு காலநிலைக் குறியீடு மட்டுமே. எல் நினோவின் வலிமை, அது நீடிக்கும் காலம், இந்தியப் பெருங்கடலின் நிலை, வங்கக் கடலில் உருவாகும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே மழைப்பொழிவில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
வானிலை முன்னறிவிப்புகளின் முக்கியத்துவம்
பருவகால வானிலை முன்னறிவிப்பு என்பது அடுத்த சில மாதங்களில் மழை இயல்பைவிட அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது இயல்பான அளவிலோ இருக்கக்கூடும் என்பதை நிகழ்தகவு அடிப்படையில் தெரிவிப்பதாகும். ஆனால், அடுத்த 24 முதல் 72 மணி நேரத்தில் எந்த மாவட்டத்தில் மழை பெய்யும், எங்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்பதைக் குறிப்பது குறுகியகால வானிலை முன்னறிவிப்பாகும்.
பருவமழை குறைவாக இருக்கலாம் என்ற கணிப்பு இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், பருவமழை இயல்பாக இருக்கும் என்ற கணிப்பு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இயல்பான மழை கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதமல்ல. விவசாயிகள் விதைப்பு, நடவு, பயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றைத் திட்டமிடவும், நீர்வளத் துறையினர் நீர்த்தேக்கங்களை நிர்வகிக்கவும், பொதுமக்கள் பலத்த மழை மற்றும் வெள்ள அபாயங்களை எதிர்கொள்ளவும் சமீபத்திய வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.
தமிழகத்தில் எந்தப் பகுதிகளில் மழை எப்படி இருக்கும்?
நடப்பு வடகிழக்குப் பருவமழையில், ஒட்டுமொத்த மழை அளவைவிட, மாவட்டங்களுக்கு இடையிலான மழைப்பரவல் முக்கியத்துவம் பெறக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பருவகால மழையின் மொத்த அளவு, மழை பெய்யும் நாள்கள் மற்றும் அடுத்தடுத்த மழைக்கு இடையிலான கால இடைவெளிகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியமாகும். தற்போதைய வடகிழக்குப் பருவமழையின்போது, குறிப்பிட்ட சில நாள்களில், குறிப்பிட்ட சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
காவிரி டெல்டா
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நெல் சாகுபடிக்குத் தேவையான மழையின் காலம், மழையின் தொடர்ச்சி, மழைப் பரவல் ஆகியவை முக்கியமானவை. மழையின் மொத்த அளவு இயல்பாக இருந்தாலும்கூட, மழைப்பொழிவுகளுக்கு இடையிலான மிகச்சிறிய அல்லது மிக நீண்ட இடைவெளிகள் விவசாயத் திட்டமிடலைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
தென் மாவட்டங்கள்
மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பான அல்லது இயல்பைவிட அதிகமான மழை பெய்யக்கூடும் என்ற கணிப்புகள் கவனிக்கத்தக்கவை. இருப்பினும், ஒவ்வொரு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே அளவில் மழை பெய்யும் என்று கூற முடியாது.
மேற்கு மாவட்டங்கள்
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பு, ஈரப்பதம், காற்றின் திசை, உள்ளூர் வளிமண்டலச் சுழற்சிகள் ஆகியவை மழையின் தீவிரத்தைத் தீர்மானிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இவை வெறும் கணிப்புகள் மட்டுமே, இவற்றை உறுதிப்படுத்தப்பட்ட மாவட்ட வாரியான முன்னறிவிப்புகளாகக் கருதக் கூடாது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளே இறுதியானவை. தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, எல் நினோ மட்டுமன்றி, மழையை நிர்ணயிக்கும் பிற காரணிகளின் தன்மையைப் பொறுத்தே மழையின் அளவு இருக்கும் என்பதே அறிவியல்ரீதியிலான உண்மை. மற்றவை எல்லாம் நிகழ்தகவு அடிப்படையிலான அனுமானங்களேயன்றி, அறிவியல்ரீதியிலான, நம்பகத்தன்மை வாய்ந்த கணிப்புகள் அல்ல.
எல் நினோவின் வலிமையும் வடகிழக்குப் பருவமழை பதிவுகளும் (1990 - 2026)
வறட்சியைத் தாங்கும் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்
பெருமழை பெய்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் போன்று, போதிய மழையின்மை காரணமாக ஏற்படும் பாதிப்புகளும் விவசாயிகளுக்கு அதிகமாகத்தான் இருக்கும். எனவே, விவசாயிகள் நடப்பு சம்பா சாகுபடி காலத்தில் நீண்டகால நெல் ரகங்களுக்குப் பதிலாக, வறட்சியைத் தாங்கக்கூடிய குறுகிய கால நெல் ரகங்கள், கம்பு, தினை, உளுந்து, மணிலா போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். வறட்சி காரணமாக நீரைப் பயன்படுத்துவதில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வழக்கமான நீர்ப்பாசன முறைக்குப் பதிலாக சொட்டுநீர்ப் பாசனம், பயிர் மூடாக்கு செய்தல், நீர் ஆவியாதலைத் தடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதுபோல மழைக் காலங்களில் பண்ணைக் குட்டைகளில் நீரை சேகரித்து, அதை வறட்சிக் காலத்துக்குப் பயன்படுத்தும் வகையிலான பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கான ஆலோசனைகளை மாவட்ட வேளாண் துறை மேற்கொண்டு வருகிறது.
-பா.சுரேஷ், வேளாண் இணை இயக்குநர் (பொ), விழுப்புரம் மாவட்டம்.
தென்மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிகழாண்டும் தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்யும். திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர்,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழையைப் பெற வாய்ப்புள்ளது.
தென்கடலோரப் பகுதிகளான ராமேசுவரம், பாம்பன், தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், உவரி ஆகிய கடலோரப் பகுதிகளில் குறுகிய காலகட்டத்தில் பெருமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பாபநாசம், மணிமுத்தாறு, தென்காசி ஆகிய  தென் தமிழக மலைப் பகுதிகளிலும் அதிபலத்த மழை பெய்யும். பிற வட மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பதிவானாலும் குறுகிய காலத்தில் பெருமழை பதிவாக வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை பெறும் மாஞ்சோலை காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் 3,000 மி.மீ.க்கு மேல் இந்தப் பருவ காலத்தில் மழை பெறும்.
நிகழாண்டு வடகிழக்குப் பருவமழையானது டிசம்பர் மாதத்திலேயே விலகத் தொடங்கும். எல் நினோ காரணமாக 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குளிர் கால மழை இயல்பைவிட குறைவாகவே பதிவாக வாய்ப்புள்ளது.
-ராஜா, தனியார் வானிலை ஆய்வாளர், தென்காசி
2016 - 2026: தமிழக வடகிழக்குப் பருவமழைப் பதிவுகள்
எல் நினோவின்  தாக்கங்கள்
வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறை: சில பகுதிகளில் மழை குறைவதால் நீர்த்தேக்கங்கள், ஏரிகள், நிலத்தடி நீர் ஆகியவற்றின் இருப்பு குறையலாம். குடிநீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
பலத்த மழை மற்றும் வெள்ளம்: உலகின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யலாம். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, குடியிருப்புப் பகுதிகளில் நீர்த்தேக்கம் போன்ற அபாயங்கள் அதிகரிக்கலாம்.
1. விவசாய உற்பத்தி பாதிப்பு: மழை தாமதம், வறட்சி அல்லது அளவுக்கு அதிகமான மழை காரணமாக விதைப்பு, பயிர் வளர்ச்சி, அறுவடை ஆகியவை பாதிக்கப்படலாம். இதனால் உணவு உற்பத்தியும் விவசாயிகளின் வருமானமும் குறைய வாய்ப்புள்ளது.
2. வெப்பநிலை அதிகரிப்பு
எல் நினோ உலகளாவிய சராசரி வெப்பநிலையை உயர்த்தும் போக்கைக் கொண்டுள்ளது.
3. காட்டுத்தீ அபாயம்
வறட்சி மற்றும் அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் தாவரங்கள் காய்ந்து, காட்டுத்தீ ஏற்படுவதற்கான சூழல் உருவாகலாம்.
4. கடல்வளம், மீன்வளம் பாதிப்பு
கடல் நீரின் வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்துச் சுழற்சிகளில் ஏற்படும் மாற்றங்கள் மீன்களின் பரவல், இனப்பெருக்கம், மீன்பிடி வருவாய் ஆகியவற்றைப் பாதிக்கலாம்.
5. சுகாதாரப் பிரச்னைகள்
வெள்ளம், தேங்கிய நீர், வெப்ப அலைகள், குடிநீர்த் தரம் பாதிக்கப்படுதல் போன்றவற்றால் தொற்றுநோய் அபாயங்களும் வெப்பம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகல் அதிகரிக்கலாம்.
6. பொருளாதார பாதிப்புகள்
விவசாய இழப்பு, மீன்பிடி பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை, வெள்ளச் சேதம் மற்றும் பேரிடர் மீட்புச் செலவுகள் ஆகியவை உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
வளிமண்டல அமைப்புகள் அல்லாத முக்கிய காலநிலைக் காரணிகள்
1. எல் நினோ / லா நினா
பசிபிக் பெருங்கடல் மற்றும் வளிமண்டலத்தின் பரந்த அளவிலான மாற்றங்கள். இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றக்கூடும்.
2. இந்தியப் பெருங்கடல் இருமுனைக் குறியீடு
இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதி மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையிலான கடல் வெப்பநிலை வேறுபாடு. பருவமழையின் வலிமையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
3. கடல் மேற்பரப்பு வெப்பநிலை
கடலில் இருந்து வளிமண்டலத்துக்கு கிடைக்கும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைப் பாதிக்கிறது.
4. காற்றின் திசை மற்றும் வேகம்
ஈரப்பதம் எந்தப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.
மழையைத் தீர்மானிக்கும்  முக்கிய அமைப்புகள்
1. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறையும் பகுதியில் காற்று ஒன்றுகூடி மேலே எழும்புகிறது. ஈரப்பதம் போதுமானதாக இருந்தால் மேகங்கள் உருவாகி மழை பெய்யலாம். வங்கக்கடலில் உருவாகும் இத்தகைய அமைப்புகள் தமிழக மழைக்கு முக்கியமானவை.
2. புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
இவை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியைவிட, வலுவான காற்றுச் சுழற்சிகளைக் கொண்ட அமைப்புகள். இவை நகரும் பாதை மற்றும் வேகத்தைப் பொறுத்து கனமழை, மிகக் கனமழை, வெள்ளம் போன்றவை ஏற்படலாம்.
3. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
வளிமண்டலத்தின் குறிப்பிட்ட உயரத்தில் உருவாகும் சுழற்சி, காற்று மேலெழுவதற்கும் மேகங்கள் உருவாவதற்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தலாம். இது சில நேரங்களில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.
4. காற்று ஒன்றுகூடும் மண்டலம்
வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் காற்று சந்திக்கும் பகுதியில் காற்று மேலெழும்புகிறது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இடியுடன் கூடிய மழையும் பரவலான மழையும் உருவாகலாம்.
5. காற்றழுத்தத் தாழ்வுப் பள்ளம்
நீண்ட பகுதியாக நீளும் தாழ்ந்த காற்றழுத்த மண்டலம் இது. அதன் அமைவிடம், நகர்வு, அதனுடன் இணையும் காற்றுச் சுழற்சிகள் ஆகியவற்றைப் பொறுத்து மழையின் பரவல் மாறும். இந்தியாவின் தென்மேற்குப் பருவமழையில் காற்றழுத்தத் தாழ்வுப்  பள்ளம் முக்கியமான பங்கை வகிக்கிறது.
6. வெப்பச்சலன மேகங்கள்
தரைப்பரப்பு வெப்பமடைவதால் ஈரமான காற்று வேகமாக மேலெழுந்து, உயரமான மழை மேகங்கள் உருவாகலாம். இவை இடியுடன் கூடிய கனமழையை ஏற்படுத்தக்கூடும். குறிப்பிட்ட இடங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ய இது ஒரு காரணமாகும்.
7. கிழக்கத்திய அலைகள்
வெப்பமண்டலப் பகுதிகளில் கிழக்கிலிருந்து மேற்காக நகரும் வளிமண்டல அலைகள் இவை. ஈரப்பதம் மற்றும் காற்று மேலெழும் செயல்பாட்டை மாற்றி, வங்கக்கடல் மற்றும் தென்னிந்தியாவில் மழை உருவாக இவையும் காரணமாகலாம்.
8. மேடன்–ஜூலியன் அலைவு
வெப்பமண்டலத்தில் மேகங்கள், காற்று, மழை ஆகியவற்றில் ஏற்படும் பெரிய அளவிலான மாற்றம். இதன் சுழற்சி பொதுவாக 30-60 நாள்கள் நீடிக்கும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் இதன் சாதகமான கட்டம் நிலவும்போது மழைச் செயல்பாடு அதிகரிக்கலாம்; மற்ற கட்டங்களில் குறையலாம்.
வங்கதேசத்தில் 13 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடல்: தொழிலாளா்கள் போராட்டத்தில் கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு
வங்கதேசத்தில் 13 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கோனாபாரி மற்றும் மௌசாக் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களை காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டு வீசி கலைத்தனா்.
ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது குறித்து பரிசீலிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (நவ.16) நடைபெறவுள்ள நிலையில், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரும் ஆடை ஏற்றுமதியாளராக  வங்கதேசம் விளங்குகிறது. இங்கு ஆடைத் தொழிலில் 40 லட்சம் போ் ஈடுபடுகின்றனா். வங்கதேசத்தின் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட ஏற்றுமதி வருவாய் ஆடைத் துறையிலிருத்து ஈட்டப்படுகிறது.
இந்நிலையில், ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் மாதாந்திர ஊதியத்தை சராசரியாக ரூ.9,500-இல் இருந்து ரூ.22,500-ஆக  உயா்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து, திருத்தப்பட்ட ஊதிய கட்டமைப்பை பரிந்துரைக்க குறைந்தபட்ச ஊதிய வாரியத்தை கடந்த நவ. 1-ஆம் தேதி வங்கதேச அரசு அமைத்தது. மாவட்ட மூத்த நீதிபதி தலைமை வகிக்கும் இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் நவம்பா் இறுதிக்குள் பரிந்துரைகளை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பரிந்துரைகளை அரசு பரிசீலித்த பின்னா் திருத்தப்பட்ட புதிய ஊதியம் டிசம்பா் 1-ஆம் தேதிமுதல் அமலாகும் என்றும், அதனடிப்படையில் அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
இதனிடையே, குறைந்தபட்ச ஊதிய வாரியம் திங்கள்கிழமை (நவ.16) ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது. இந்தச் சூழலில் தங்களது ஊதிய உயா்வு கோரிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஊழியா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா். கோனாபாரி மற்றும் மௌசாக் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களை கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி காவல் துறையினா் கலைத்தனா். இதனால் அந்தப் பகுதியில் உள்ள 50 சிறு தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 13 பெரும் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
‘போராட்டத்துக்கு ஹசீனா காரணம்’: தொழிலாளா்களின் போராட்டத்துக்கு எதிராக வங்கதேச ஆளும் கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியினரும் வீதிகளில் போராட்டத்தை மேற்கொண்டனா். இதுதொடா்பாக வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் தகவல் விவகாரங்கள் ஆலோசகா் ஜாஹிதுா் ரஹ்மான் கூறுகையில், ‘வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தூண்டுதலின்பேரில் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா் இருக்கும் வரை அமைதியான முறையில் ஆட்சி செய்ய முடியாது’ எனத் தெரிவித்தாா்.
டிசம்பா் முதல் வாரத்தில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா்?
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டத் தொடரில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.
மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில்  50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெறாததால் அது தோல்வியடைந்தது.
இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆக.13 வரை நடைபெற்றது. இதையடுத்து, இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. அதேநேரம், 90 நாள்களுக்கு மேலாகியும் இக்கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பை குடியரசுத் தலைவா் இன்னும் வெளியிடவில்லை. இதனால், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவரும் வகையில், மழைக்கால கூட்டத் தொடரின் நீட்டிக்கப்பட்ட அமா்வை மத்திய அரசு நடத்தக் கூடும் என்ற ஊகங்கள் நீடிக்கின்றன.
டிசம்பா் முதல் வாரத்தில்...
இந்தச் சூழலில், டிசம்பா் முதல் வாரத்தில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தேதிகள் குறித்து உயா்நிலை ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முனைப்புக் காட்டிவரும் நிலையில், தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையில் (3 காலியிடங்கள் தவிா்த்து 540) மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 361 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 320 எம்.பி.க்கள் உள்ளனா். எனவே, எதிா்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவும் அவசியமாகும்.
சுமுகமாக நடைபெறுமா?
மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தென்மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகள் அதிகரிப்பு என்ற அம்சத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்றொருபுறம், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக இண்டி கூட்டணிக் கட்சிகள் தீவிர எதிா்ப்பை கடைப்பிடித்து வருவதால் கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள் தகவல்
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக அரிசி விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நெல்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அரிசி விலை ஜனவரி மாதம் குறையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனா்.
அரிசி விலை உயா்வானது சன்னரக அரிசி மூட்டைக்கு ரூ. 800 வரையும் , மோட்டா ரக அரிசி மூட்டைக்கு ரூ.600 வரையும் அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர வருவாய்க் குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகள் உயா்ந்துள்ளன.
தமிழகத்தில் 26 கிலோ கொண்ட சன்னரக அரிசி மூட்டை ஜூலை மாதத்தில் ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது ஆகஸ்டில் ரூ.1,750 ஆகவும், செப்டம்பரில் ரூ.1,900 ஆகவும் உயா்ந்து. அக்டோபரில் ரூ.2,200- ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல, 26 கிலோ கொண்ட மோட்டா ரக அரிசி மூட்டை விலை ஜூலையில் ரூ.1,200 ஆகவும், ஆகஸ்டில் ரூ.1,400 ஆகவும், செப்டம்பரில் ரூ.1.600 ஆகவும் உயா்ந்து தற்போது  ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவா் கோபி கூறியதாவது: தமிழ்நாட்டுக்கு தினமும் 100 லாரிகளில் நெல் மூட்டைகள் அண்டை மாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருந்தன. திடீரென இந்த வரத்து பாதியாகக் குறைந்தது.
நெல் தட்டுப்பாடு காரணமாக அரிசி விலை உயா்ந்தது. போதிய விளைச்சல் இல்லாததால் நெல் வரத்து குறைந்துள்ளதாகக் கூறுகின்றனா். தற்போது நெல் வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஆகவே ஜனவரி மாதம் அரிசி விலை குறையும் என்றாா்.
மேலும், விலை உயா்வால் தமிழகத்தில் அரிசி  விற்பனை சரிந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ரேஷன் அரிசியை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.  விலை உயா்வால் 26 கிலோ அரிசி மூட்டை வாங்கியவா்கள் தற்போது 10 கிலோ மட்டுமே வாங்குவதாக அரிசி வியாபாரி ஆனந்தராஜ் கூறினாா்.
அமுதம் மற்றும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட 250 அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்னி புழுங்கல் அரிசி கிலோ ரூ.60-க்கும், பச்சரிசி கிலோ ரூ 46-க்கும் கூட்டுறவு சிறப்பு அங்காடியில்  விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் நெல், அரிசி தட்டுப்பாடின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதையும் உறுதி செய்யும் வகையில், நெல், அரிசி இருப்புக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பறவைக் காய்ச்சல்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளாா்.
மனிதா்களிடையே அத்தகைய பாதிப்பு இல்லை என்பதால் அச்சப்பட வேண்டாம் என்றும், அதேவேளையில் முறையாக சமைக்காத இறைச்சிகளை உண்ணக் கூடாது என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, சென்னை, வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சில பறவைகளிடையே அந்த தொற்று காணப்பட்டதால் பூங்கா மூடப்பட்டது.
இந்த நிலையில், கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பண்ணைகளில் கோழிகள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஹெச்5 என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அவற்றுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 40,000 பண்ணைக் கோழிகள் பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. அடுத்த 3 மாதங்களுக்கு கறிக்கோழி வளா்ப்புக்கு தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியில் முதன்மையான மாவட்டமாக இருக்கும் நாமக்கல்லிலும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், மாநில சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பறவைக் காய்ச்சலுக்குள்ளான உயிரினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவும். மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்து மற்றவா்களுக்கு, ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவா்களை நாடுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், நோய்ப் பரவல் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் கூறியதாவது: தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதா்களுக்கு எந்த பாதிப்பும் கண்டறியப்படவில்லை. அதேவேளையில், பறவைகள் உயிரிழப்பது தொடா்ந்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உயிரிழக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக் கூடாது. அதேபோன்று அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
கோழிகள்தான் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியை சாப்பிடும்போது, நன்கு வேக வைக்கப்பட்ட இறைச்சியை உண்பது பாதுகாப்பானது.
மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.
தீர்வு காண வேண்டும்
கடந்த பத்து ஆண்டுகளில் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியின்போது பலியானோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலை தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
கைகளால் மலத்தை அள்ளக் கூடாது எனக்கூறும் மத்திய, மாநில அரசுகள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு சுகாதாரக் கேடுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.
பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் என்கிற போர்வையில் கையுறைகூட இன்றி சாக்கடை கால்வாய்களுக்குள் இறங்கி மனிதக் கழிவுகள் மட்டுமின்றி, நச்சுத் தன்மைமிக்க மருத்துவமனை கழிவுகளைக்கூட அகற்றி வருகின்றனர்.
மத்திய அரசின் 'தூய்மை பாரத இயக்கம், தூய்மை சேவை இயக்கம்', தமிழக அரசின் 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் எனப் பல தூய்மை இயக்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இது தொடர்பாக விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டாலும், தினமும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவரும் தூய்மைப் பணியாளர்கள் குறித்து வெளி உலகுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது யார் என்ற நிலைதான் தொடர்கிறது.
மலக்குழி  மரணம் எனும் கொடிய மரணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே உத்தர பிரதேசம்தான் முதலிடத்தில் இருந்தது; தற்போது, தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது வருத்தத்துக்குரியது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபோது, விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறி 100 பேர் பலியாகி உள்ளதாகவும், உத்தர பிரதேசத்தில் 98 பேரும், குஜராத்தில் 86 பேரும் பலியாகியுள்ளதாக தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம் தெரிவிக்கிறது.
மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவது தடை செய்யப்பட்டிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் கூறினாலும், ஆங்காங்கே கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியின் போது விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
சாக்கடைக் கழிவுகளை அகற்றுதல், கழிவுநீர்த் தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
மலக்கழிவுகள் அள்ள இயந்திரம்  வந்துவிட்டாலும், சிலர் குறைந்த கூலிக்காக தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்தி, குழிக்குள் போதிய பாதுகாப்பு வசதியின்றி இறங்க வைக்கும்போதுதான் இத்தகைய மரணங்கள் நிகழ்கின்றன. இதிலும் துயரம் என்னவென்றால், ஒருவர் முதலில் இறங்கி விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்து உயிரிழக்கும்போது, அவரைக் காப்பாற்றுவதாக மற்றவர்களும் முயன்று உயிரிழப்பதுதான்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சட்டம் நிர்ணயித்திருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்கிறதா என்றால் அதுவும் பலரின் குடும்பத்தினருக்கு கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், அதில் உண்மையில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உலகெங்கும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடுகளில்கூட இயந்திரங்களைப் பயன்படுத்தித்தான் கழிவுநீர்த் தொட்டிகள் சுத்தப்படுத்தப்படுகின்றன. கைகளால் கழிவு அகற்றுவோர் பணி நியமித்தல், உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டம், 1993 மற்றும் கையால் மனிதக் கழிவு அகற்றுவோரை பணியமர்த்த தடை மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டம் 2013 என இரு சட்டங்களும் இயற்றப்பட்டிருந்தாலும், அவை  ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுப்பதில் செயலற்ற நிலையில்தான் உள்ளன.
ஜாதிய மனநிலை கொண்ட சிலரும் இந்த மரணங்களுக்கு காரணமாகின்றனர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம். இந்தத் தொழிலை மேற்கொள்ளும் நபர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு மீட்டெடுத்து, அவர்களுக்கு கண்ணியமான மாற்றுத் தொழிலை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேலும், அவர்களின் மறுவாழ்வை உறுதி செய்யும் வகையில், அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, தொழில் பயிற்சி கிடைத்திடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது பிணையில் வெளிவர முடியாத தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்பட்டாலும், அது பின்பற்றப்படுவதில்லை.
சட்டத்தை மீறி கழிவுநீர்த் தொட்டிக்குள் தொழிலாளர்களை இறங்க வைப்பவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.50,000 அபராதமோ அல்லது ஓராண்டு சிறை தண்டனையோ வழங்க வேண்டும். அப்போதுதான், இந்தத் தொழில் சமுதாயத்தின் பிடியில் இருந்து விரட்டியடிக்கப்படும்.
ஒடுக்கப்பட்டோருக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களைக் கடுமையாக்கி அமல்படுத்துவதில் காலதாமதம் இருக்கக் கூடாது. மேலும், இதைத் தொடர்ந்து கண்காணிக்க தனியாக குழு அமைக்க வேண்டும்.
இயந்திரங்களைப் பயன்படுத்தி மட்டுமே கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நடைமுறையை முழுமையாகக் கொண்டு வரவேண்டும். இதுபோன்ற முன்னெடுப்புகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும். இல்லையெனில், இந்த இழிநிலை தொடந்துகொண்டேதான் இருக்கும்.
இந்தியா உள்ளிட்ட ‘க்வாட்’ நாடுகளின் தலைவா்கள் அடுத்த வாரம் சந்திப்பு: அமெரிக்க இணை அமைச்சா்
இந்தியா உள்ளிட்ட ‘க்வாட்’ உறுப்பு நாடுகளைச் சோ்ந்த தலைவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி பிலிப்பின்ஸில் அடுத்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சா் டிலன் ஜான்சன் தெரிவித்தாா்.
11 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஆசியான் கூட்டமைப்புக்கு நிகழாண்டு பிலிப்பின்ஸ் தலைமை தாங்குகிறது. அங்கு ஆசியான் உச்சிமாநாடு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) தொடங்கியது. மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நவ.16 முதல் நவ.18 வரை பிலிப்பின்ஸ் செல்லும் பிரதமா் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறாா்.
க்வாட் கூட்டமைப்பில் உறுப்பினா்களாக உள்ள இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த தலைவா்களும் இதில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக டிலன் ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிலிப்பின்ஸில் அடுத்த வாரம் க்வாட் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
க்வாட் கூட்டமைப்பை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பலவீனப்படுத்துவதாக கூறுவது தவறு. கடந்த இரண்டு ஆண்டுகளில் க்வாட் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ 5 முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.
இதில் 3 சந்திப்புகள் கடந்த 6 மாதத்தில் நடைபெற்றுள்ளன. வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதல் அதிகாரபூா்வ சந்திப்பையும் க்வாட் வெளியுறவு அமைச்சா்களுடன்தான் மாா்கோ ரூபியோ நடத்தினாா்’ என குறிப்பிட்டாா்.
வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்: 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.16) ‘அக்வான்’ புயல் உருவாகிறது. இது, அடுத்த 2 நாள்களில் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் நவ.17, 18, 19-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவடைந்து, தெற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை (நவ.16) ‘அக்வான்’ புயலாக வலுப்பெறும்.
இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் தீவிர புயலாக மாறும். இந்தப் புயல் அடுத்த 2 நாள்களில் மேலும் வலுப்பெற்று வட-மேற்கு திசையில் நகா்ந்து ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.
இந்த வானிலை சூழல் காரணமாக, திங்கள்கிழமை (நவ.16) தமிழகத்தில் பல  மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும்.
மஞ்சள் எச்சரிக்கை: நவ.17-இல் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை: தொடா்ந்து, நவ.18-இல் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், நவ.19-இல் சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாள்களில் வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.16) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, நவ.16 முதல் 19-ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், அந்தமான் கடல், வங்கக் கடலில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 சதவீதம் மழை குறைவு
நிகழாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒன்றரை மாதத்தில் வங்கக் கடலில் ‘அா்னாப்’, ‘முரசு’ என இரு புயல்கள் உருவாகி ஆந்திரப் பகுதியில் கரையைக் கடந்துவிட்டன. 3-ஆவதாக தற்போது உருவாகவுள்ள ‘அக்வான்’ புயலும் நவ.19-ஆம் தேதி ஆந்திரப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வானிலை காரணமாக புயல்கள் ஆந்திரப் பகுதியில் கடந்து வரும் நிலையில், பருவமழை காலத்திலும் தமிழகத்தில் மழை பெய்யாமல் பரவலாக வட வானிலையே நிலவுகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் நிகழாண்டு பருவமழை இயல்பை விட குறைவாகவே பதிவாகியுள்ளது.
அந்த வகையில், அக்.1 முதல் நவ.15 வரை இயல்பாக 277.7 மி.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால், நிகழாண்டு 259.7 மி.மீ. அதாவது 6 சதவீதம் குறைவாகவே மழை பதிவானது. இதில், 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பதிவானது. அதிகபட்சமாக தஞ்சாவூரில் இயல்பைவிட 53 சதவீதம் குறைவாகவும், செங்கல்பட்டு - 45, திருச்சி - 35, கடலூா், மதுரை, புதுக்கோட்டை - 34, சிவகங்கை - 32 சதவீதம் மழை குறைவாக பதிவானது.
அதேபோல், சென்னையில் இந்த காலக்கட்டத்தில் இயல்பாக 507 மி.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால், நிகழாண்டு 389 மி.மீ. அதாவது 23 சதவீதம் குறைவாக மழை பதிவானது.
இதில், குறிப்பிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அந்தவகையில், கோவையில் இயல்பைவிட 44 சதவீதம் அதிகமாகும், ஈரோடு - 34, கள்ளக்குறுச்சி - 20 சதவீதம் அதிகமாக மழை பதிவானது.
விருது நிகழ்ச்சி: பிரிட்டன் இளவரசா் இன்று மும்பை பயணம்
உலகின் முன்னணி சுற்றுச்சூழல் விருதாகக் கருதப்படும் ‘எா்த்ஷாட்’ விருது 2026-ஐ வென்றவா்களின் பெயா்களை அறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரிட்டன் இளவரசா் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகிய இருவரும் திங்கள்கிழமை (நவ.16) மும்பைக்கு பயணிக்கவுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்தது.
பிரிட்டன் அரியணை வாரிசால் 6 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த வருடாந்திர விருதின் இறுதிச்சுற்றில் 5 வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். அவா்கள் ஒவ்வொருக்கும் தலா ரூ.12.25 கோடி (13 மில்லியன் அமெரிக்க டாலா்) பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இதுதொடா்பாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மும்பையில் நடைபெறும் எா்த்ஷாட் விருது 2026 அறிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நவ.16 முதல் நவ.18 வரை இளவரசா் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோா் இந்தியாவுக்கு பயணிக்கின்றனா்.
இந்தப் பயணத்தின்போது பல்வேறு துறைகளில் பிரிட்டன்-இந்தியா இடையேயான ஒத்துழைப்பை கொண்டாடும் விதமாக மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவா்கள் பங்கேற்கவுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரதமா் மோடியுடன் சந்திப்பு: விருது நிகழ்ச்சியைத் தொடா்ந்து, இருவரும் புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்திக்க உள்ளனா். பில்லிப்பின்ஸில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்று இந்தியா திரும்பிய பின்னா், இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.
தேவை பொறுப்புணர்வு!
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நேபாளம் மற்றும் வட மாநிலங்கள்; மாசடைந்த காற்றால் மூச்சுத் திணறும் தில்லி; மழை நீரில் மிதக்கும் சென்னை; நிலச்சரிவில் புதையுண்டு தவிக்கும் நீலகிரி மற்றும் வயநாடு- இவையெல்லாம் ஆண்டுதோறும் தவறாமல் நடக்கும் நிகழ்வுகள்!
இவற்றுக்கெல்லாம் காரணம் சுற்றுச்சூழல் மிக வேகமாகச் சிதைந்து வருவதுதான் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். இருந்தும், அரசும் சரி- மக்களும் சரி, இது குறித்து கவலைப்படுவதாகவோ, தீர்வு காண முயற்சிப்பதாகவோ தெரியவில்லை. இதுதானா நமது பொறுப்புணர்வு?
நம் நாட்டின் உற்பத்தித் திறன் எதில் அதிகம் என்று பார்த்தால், குப்பை உற்பத்தியில்தான் என்பது கண்கூடாகத் தெரிகிறது!. பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் கலாசாரம், விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கும் சில சடங்கு சம்பிரதாயங்கள்- இவையே குப்பை மிக அதிகமாக உருவாவதற்கான காரணங்கள்.
உணவு, ஆடைகள், விளையாட்டுப் பொருள்கள், அணிகலன்கள் போன்றவற்றை வாங்கும்போது, தேவை இருக்கிறதா?, இல்லையா? என்று யாரும் சிந்திப்பதில்லை; வாங்கித் தள்ளுகிறார்கள். அவற்றின் பயன் முடிந்ததும், அவற்றை எப்படி ஒழிப்பது என்று தெரியாமல் குப்பையில் வீசுகிறார்கள்.
வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கம் குறைந்து உணவகங்களுக்கு சென்று அல்லது அங்கிருந்து வாங்கிச் சாப்பிடும் பழக்கம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. தெருவுக்கு நான்கு உணவகங்கள் உள்ளன. அவை காய்கறிக் கழிவுகளையும் மீதமாகும் உணவையும் அப்படியே குப்பையில் வீசுகின்றன. வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும்பாலும் நெகிழி டப்பாக்களிலும் நெகிழிப் பைகளிலும்தான் உணவுப் பதார்த்தங்களைக் கட்டிக் கொடுக்கின்றன.
வாங்கிச் செல்பவர்களும் சாப்பிட்டுவிட்டு மிச்சமானவற்றை ஒரு நெகிழிப்பையில் போட்டுக் கட்டிக் குப்பைத் தொட்டியில் அல்லது சாலையோரத்தில் அல்லது சாக்கடையில் வீசி எறிந்துவிட்டால் வேலை முடிந்தது! நெகிழித் தடையெல்லாம் வெறும் பேச்சளவில்தான்!
வீடுகள், உணவகங்கள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், சாலையோரக் கடைகள் எல்லாவற்றிலும் இதே பொறுப்பின்மையைத்தான் காண்கிறோம். விழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம்.
அண்மையில் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை ஆகிய விழாக்கள் முடிந்து தெரு முனைகளில் குவிந்திருந்த வாழை மரங்களும், கரும்புகளும், பூமாலைகளும் மழை நீரில் நனைந்து அழுகி நாற்றமெடுத்துக் கிடந்தன.
கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பொறுப்புணர்வை என்னவென்று சொல்வது? மேற்சொன்ன எல்லாவிதக் குப்பைகளையும் மனசாட்சியே இல்லாமல் குளம்-குட்டைகளில் கொட்டுகிறார்கள்.
மாநகராட்சிகளும் நகராட்சி, ஊராட்சிகளும் குப்பைகளைக் குளங்களிலும் ஆறுகளிலும் பயன்பாடற்று இருக்கும் கிணறுகளிலும் கொட்டுகின்றன. வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்ட இடங்களிலெல்லாம் குப்பை மலைகள் அடித்துக் கொண்டுவரப்பட்டு வீடுகளை மூடி உயிர்ச்சேதம் உண்டாக்கியது குறித்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் பார்த்தும் நம்மை மாற்றிக் கொள்ளவில்லையே!
ஆறுகளும் குளங்களும் கழிவுநீர்க் குட்டைகளாகிக் கொண்டிருக்கின்றன. வீடுகள், தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் ஆகியவற்றின் கழிவுநீர், நீர்நிலைகளில்தான் விடப்படுகிறது. விநாயக சதுர்த்தி முடிந்த பின்னர் எத்தனை சிலைகள் குளங்களில் கரைக்கப்பட்டன? இருந்த கொஞ்ச  தண்ணீரும் வீணாகிவிட்டதே. இப்படி நீர்நிலைகளை அழித்தால் நாளை நம் குழந்தைகள் குடிக்கத் தண்ணீருக்கு என்ன செய்வார்கள்.
தீபாவளியின்போது, காசைக் கரியாக்கி, காதைச் செவிடாக்கி, காற்றை மாசாக்கி, சுற்றுச்சூழலைச் சின்னாபின்னமாக்கும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தால்தான் என்ன?
அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று அங்கலாய்க்கிறோம். விழாக் காலங்களில் வீடுகளிலும் கடைகளிலும் வழிபாட்டு இடங்களிலும் சரம் சரமாய்ச் சரவிளக்குகளைத் தொங்கவிடுவதையும், ஒலிபெருக்கிகளை அலற விடுவதையும்  நிறுத்தினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். இப்படி அதிகமான மின்சாரப் பயன்பாடு இருப்பதால்தான், அதிக எண்ணிக்கையில் அனல் மின் நிலையங்களும், நீர் மின் நிலையங்களும் தேவைப்படுகின்றன; அவற்றை உருவாக்க நிலக்கரியும் கனிமங்களும் ஏராளமாக வெட்டியெடுக்கப்படுகின்றன; காடுகள் அழிக்கப்படுகின்றன; இவற்றின் விளைவுதான் அதிக வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும், பூகம்பமும்!
கட்டுப்பாடற்ற சுற்றுலாவால் சுற்றுச்சூழல் சிதைந்து போனதைப் பற்றியோ, சிதைந்து கொண்டிருப்பதைப் பற்றியோ அரசுகளுக்கும் மக்களுக்கும் எந்தக் கவலையுமில்லை. பர்லியாற்றில் ஒரு பேருந்து கவிழ்ந்து ஓர் உயிர் பலியான பிறகுதான், நீலகிரி மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் பொதுப் போக்குவரத்தையும் தடை செய்திருக்கிறது.
நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வாகன எண்ணிக்கைக் கட்டுப்பாடு மற்றும் சில குறிப்பிட்ட நெகிழிப் பொருள்களைக் கொண்டு செல்லத் தடை ஆகியவற்றை  ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. சுற்றுலா காலத்தில் உதகைக்கு ஒரு நாளைக்கு 6,000 வாகனங்கள் செல்லலாம் என்று வரையறுத்துள்ளது; இதுவே மிக அதிகம்.
மலைப் பிரதேசங்கள் மிக மெல்லிய சூழலை உடையவை. இத்தனை வாகனங்ககளின் புகையும் இத்தனை மக்களின் நடமாட்டமும் அந்த மெல்லிய சூழலுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிக்கென மலைப் பாறைகள் செங்குத்தாக வெட்டப்பட்டு மரங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு, சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. வாகனங்களை நிறுத்துவதற்கும் உணவகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டுவதற்கும் மரங்கள் வெட்டப்பட்டு, மேடுகள் சமமாக்கப்படுகின்றன.
அரசே இப்படி சுற்றுச்சூழலைச் சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மக்கள் சும்மா இருப்பார்களா? சட்டவிரோத விடுதிகள் புற்றீசல்கள்போல முளைத்துக் கழிவுகளைப் பள்ளங்களில் கொட்டியும் கழிவு நீரை நீரோடைகளில் திறந்து விட்டும் அட்டகாசம் செய்கின்றன. இத்தனை கட்டுமானங்களும் ஒரே நாளில் நடந்து விடுவதில்லை. அதிகாரிகளும் மக்களும் பார்த்துக் கொண்டிருக்க நாள்பட நாள்படத்தான் நடக்கின்றன. அதிகாரிகளுக்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் இவற்றால் நல்ல வருமானமும், மக்களுக்கு அளவில்லாத உல்லாசமும் கிடைக்கின்றன. அதனால் வாளாவிருக்கிறார்கள்.
காடுகளுக்குள் இருக்கும் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. மதம் சார்ந்த விஷயம் என்பதால் வனத் துறையும் காவல் துறையும் கட்டுப்பாடுகள் விதிக்கத் தயங்குகின்றன. அப்படியே வனத் துறை சில கட்டுப்பாடுகளை அறிவித்தாலும், மக்கள் அவற்றுக்கெல்லாம் அடங்குவதில்லை. முன்பு சில குறிப்பிட்ட தினங்களுக்கு மட்டும் சென்று வழிபட்டு வந்தவர்கள், இப்போது ஆண்டின் எல்லா நாள்களும் உள்ளே செல்லத் தொடங்கி இருக்கிறார்கள்; எண்ணிக்கையோ லட்சத்தை எட்டிவிட்டது. காட்டுக்குள் விலங்குகளைப்  பலி கொடுத்து அவற்றைச் சமைத்துச் சாப்பிட்டு, நீர்நிலைகளை மாசுபடுத்தி, உல்லாசமாக இருந்துவிட்டு வருகிறார்கள்; காடுகளும் விலங்குகளும் தாங்குமா?
சுற்றுச்சூழல் போராளிகள் எத்தனை வழக்குகள்தான் போடுவது? நீதிமன்றத் தீர்ப்புகளுமேகூடப் பல சமயங்களில் 'மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது' என்ற நோக்கில் மக்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன. அப்படியே கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அரசு நிர்வாகம் அத்தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றன.
சுற்றுச்சூழல் வேகமாக அழிந்து, இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்துக்  கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நமது பொறுப்பு என்ன?
பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் கலாசாரத்தை ஒதுக்க வேண்டும். சுற்றுலா செல்வதையும் பொது இடங்களில் கேளிக்கை, வழிபாடு போன்ற காரணங்களுக்காகப் பெருமளவில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தைக் குடும்பத்தினருடன் வீட்டில் செலவிட்டால் சுற்றுச்சூழலும் மேம்படும், மனநலமும் மேம்படும். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பட்டாசு வெடிப்பது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது, கடவுள்  சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது, வனங்களுக்குள் சென்று வழிபடுவது போன்ற சம்பிரதாயங்களை  அறவே விட்டுவிட வேண்டும். பெரும்பாலான மக்கள் கல்வியறிவு பெற்றுள்ள நிலையில், விலங்குகளைப் பலியிடுவது அநாகரிகம், அநியாயம் என்பதை உணர்ந்து அந்த வழக்கத்தைக் கைவிட வேண்டும். குப்பையைத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்தால் சுற்றுப்புறமும் தூய்மையாகும்; பொது சுகாதாரமும் மேம்படும். இவை பொதுமக்களின் பொறுப்பாகும்.
அனைத்துத் துறை அரசு ஊழியர்களுக்கும் சுற்றுச்சூழல் குறித்த சட்டங்கள், விதிமீறல்கள் அவற்றுக்கெதிரான நடவடிக்கைகள் குறித்துப் பயிற்சியளிக்க வேண்டும். சுற்றுலா, வளர்ச்சி ஆகியவை சுற்றுச்சூழலுக்கு எதிராகத்தான் இருக்கும்; இது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து அரசு, சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமையளித்துப் பல கடும் கட்டுப்பாடுகளுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்போதைய உடனடித் தேவை நம்மிடம் பொறுப்புணர்வு; அதையும் தாண்டிக் கடமையுணர்வு. நம் பொறுப்பின்மையால் கஷ்டப்படப் போவது நாம் மட்டுமல்ல, நமக்கு அடுத்துவரும் தலைமுறையினரும்தான் என்பதை உணர்ந்து, நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதே அறிவுடைமையாகும்!
சபரிமலை வனப் பகுதி மருத்துவப் பணியாளா்களுக்கு உணவு விநியோகத்தை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வனப் பகுதியில் பக்தா்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ய பணியமா்த்தப்பட்டுள்ள மருத்துவ மற்றும் பஞ்சாயத்து பணியாளா்களுக்கு உணவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேரள அரசுக்கு கேரள உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
முன்னதாக, காவலா் உணவகத்தில் இருந்து காவலா்களுக்கு உணவு விநியோகிக்க தடை விதித்து கேரள அரசு கடந்த அக்.15-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், உயா்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் வரும் நவ.17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தா்களின் நலன் மற்றும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணிகள் குறித்து கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, கேரள அரசின் அக்.15-ஆம் தேதி உத்தரவு பின்பற்றப்பட்டால் எருமேலி-கானனபாதை வனப் பகுதியில் பணியாற்றும் மருத்துவ மற்றும் பஞ்சாயத்து பணியாளா்களுக்கு  உணவு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பேசிய நீதிபதிகள், ‘காவலா் உணவகத்தில் இருந்து எருமேலி-கானனபாதை வனப் பகுதியில் பணியாற்றும் மருத்துவ மற்றும் பஞ்சாயத்து பணியாளா்களுக்கு காவலா் உணவகத்தில் இருந்து உணவு விநியோகிக்க அனுமதிக்குமாறு மாநில அரசிடம் காவல் துறை கேட்டுள்ளது. இதில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியமும் எடுத்துரைத்துள்ளது.
ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படைச் சேவைகள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ, பஞ்சாயத்து பணியாளா்களுக்கு உணவு விநியோகம் மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டால் அது சரியாக இருக்காது. இதனால் அவா்களது கடமையும் பாதிக்கப்படும்.
எனவே, பக்தா்களின் நலனைக் கருத்தில்கொண்டும், காவல் துறை, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்றும் காவலா் உணவகத்தில் இருந்து மருத்துவ மற்றும் பஞ்சாயத்து பணியாளா்களுக்கு தங்கு தடையின்றி உணவு விநியோகிக்கப்படுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்’ என்றனா்.
பிரேக் செயல்படாத வந்தே பாரத் பயணிகள் இல்லாமல் 463 கி.மீ. இயக்கம்: விசாரணைக்கு உத்தரவு
ஜாா்க்கண்டில் இருந்து உத்தர பிரதேசம் வரை, 463 கி.மீ. தொலைவுக்கு பிரேக் அமைப்பு சரியாக செயல்படாத வந்தே பாரத் ரயில், பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாக தென்கிழக்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏனெனில், அந்த ரயில் இயக்கப்பட்டது பிற பயணிகள் ரயில்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருந்தது.
கடந்த மாதம் 24-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு சில நாள்களுக்குப் பிறகு, நவம்பா் 11-ஆம் தேதி அஸ்ஸாமில் பயணிகளுடன் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டது. அதில் ரயிலின் பிரேக் சாா்ந்த அலட்சியப் போக்கு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போதுமான பிரேக் திறன் இல்லாமல் ரயிலை இயக்குவது மிகக் கடுமையான பாதுகாப்பு குறைபாடு. இது மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கலாம். ரயில் ஊழியா்கள் மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், ஒட்டுமொத்த ரயில்வே செயல்பாடுகளின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும்.
ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாட்டியாவில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஜான்சிக்கு வந்தே பாரத் ரயில் பெட்டிகளை சரக்கு ரயில் என்ஜின் மூலம் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது. இதற்காக சரக்கு ரயில் என்ஜினின் பிரேக் அமைப்புடன் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் பிரேக் அமைப்பும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், ரயில்வே ஊழியா்கள், பிரேக் அமைப்புகளையும் முறையாக இணைக்கத் தவறியுள்ளனா். அதுமட்டுமின்றி, பிரேக் சரியாக செயல்படவில்லை என்று ரயில் ஓட்டுநா்கள் எச்சரிக்கை விடுத்தும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் ரயிலைத் தொடா்ந்து இயக்க அனுமதித்துள்ளனா். இது தொடா்பாக ரயில் ஓட்டுநா்கள் எழுத்துப்பூா்வமாக அளித்த புகாரின் அடிப்படையில் தொடா்புடைய ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எதிா்காலத்தில் இதுபோன்ற தவறுகளும், அலட்சியங்களும் நிகழாதவாறு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ரயில் கவிழ்ப்பு சதியில் பாகிஸ்தானுக்கு தொடா்பு: பெண் உள்பட இருவா் கைது
ராஜஸ்தானில் வெடிகுண்டு மூலம் தண்டவாளத்தை தகா்த்து ரயிலைக் கவிழ்க்க நடைபெற்ற சதியில் பாகிஸ்தானுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகா் மாவட்டத்தில் கடந்த 3-ஆம் தேதி இரவு ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது. அதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதன் பின்னணியில் பயங்கரவாத சதித் திட்டம் உள்ளதா என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை மேற்கொண்டது. இந்த சம்பவம் தொடா்பாக பஞ்சாபில் மக்தீப் கௌா் என்ற பெண், தேவேந்திர சிங் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். முதல் கட்ட விசாரணையில் அவா்களுக்கு பாகிஸ்தானுடன் தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தானைச் சோ்ந்த ஷா என்ற நபருடன் மக்தீப் கௌா் தொடா்பில் இருந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும்தான் ரயில் கவிழ்க்க தண்டவாளத்தை குண்டு வைத்து தகா்த்துள்ளனா். அவா்களிடம் இருந்து இரு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 46 தோட்டாக்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
மகக்தீப் கௌரின் கணவா் கரண்வீா் சிங், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கெனவே பஞ்சாபில் கைதாகி சிறையில் உள்ளாா். அவரது கைது நடவடிக்கைக்குப் பிறகு, மகதீப் கௌருக்கு பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களுடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது.
அவா்கள் இந்தியாவில்  தண்டவாளத்தில் குண்டுவெடிப்பை நடத்துமாறு குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு உத்தரவிட்டுள்ளனா். அக்டோபா் மாதம் முதல் பல்வேறு முறை குண்டுவெடிப்புகளை நடத்த முயற்சித்தனா். எனினும், தொழில்நுட்பப் பிரச்னை அந்த குண்டுகள் வெடிக்கவில்லை.
இதையடுத்து, பாகிஸ்தானைச் சோ்ந்தவா் வழங்கியதாகக் கூறப்படும் டைமா் வெடிகுண்டைப் பயன்படுத்தி, நவம்பா் 3-ஆம் தேதி இரவு சுமாா் 9.45 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்த்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குண்டுவெடிப்பு சதியில் பெண்ணைப் பயன்படுத்துவதன் மூலம் காவல் துறையின் சந்தேகத்தைத் தவிா்க்கலாம் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இணையவழியில் பணம் பெற்றுள்ளனா்.
இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா, சந்தேக நபா்களின் தொடா்புகள், பணப் பரிவா்த்தனைகள் எவ்வாறு நடைபெற்றன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தனா்.
நல்லிணக்க ஒப்படைப்பு
சுதந்திரத்துக்கு முன்பு நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த சிலைகள், மரபுச் சின்னங்கள் போன்றவை அண்மைக்காலமாக வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருந்து அந்தந்த நாட்டின் அரசுகளால் திருப்பி அளிக்கப்பட்டு வருகின்றன.
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், கடந்த நவம்பர் 9-ஆம் தேதி நாகா சமூகத்தைச் சேர்ந்த 39 பேரின் எச்சங்களைத் திருப்பி அளித்துள்ளது. இவை 1884-இல் நிறுவப்பட்ட அதன் பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்தன. இந்த எச்சங்கள் நாகா நல்லிணக்க மன்றம் மற்றும் நாகா பழங்குடியினர் பேரவையிடம் அதிகாரபூர்வமாக தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாகாலாந்தின் கோஹிமா நகரில் உள்ள நாகா ஒற்றுமைப் பூங்காவில் உடல் எச்சங்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் குறித்த, மோசமான காலனித்துவக் கருத்துருக்கள் தங்களது சேகரிப்பில் உள்ளன என்பதை பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் உணர்ந்தது. அருங்காட்சியகத்தில் உள்ள காலனித்துவச் சிந்தனைகள் சார்ந்த பொருள்களை அதில் இருந்து நீக்கி, அந்தப் பொருள்கள் சார்ந்த சமூகங்களுடன் நல்லிணக்கத்துடன் புதிய காட்சியமைப்புகளைஅருங்காட்சியகத்தில் உருவாக்குவது அவசரத் தேவை என பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் திட்டமிட்டது.
தங்களது மூதாதையர்களின் மனித எச்சங்கள் உள்பட, உலகிலேயே மிகப் பெரிய நாகா பண்பாட்டுப் பொருள்களின் சேகரிப்புகள் (சுமார் 6,466 பொருள்கள்) அருங்காட்சியகங்களில் உள்ளதை  நாகா மானுடவியலாளர்கள் உணர்ந்தனர். அவற்றை மீட்க 2020-இல், நாகர் தாயகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினர்.
தற்போது பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 213 மூதாதையர்களின் எச்சங்களைத் திருப்பி ஒப்படைப்பது தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அவர்களது நோக்கம். காலனித்துவப் படையெடுப்புகளின்போது நினைவுப் பொருள்களாகவும், நிர்ப்பந்தத்தின் பேரிலும் எடுத்துச் செல்லப்பட்ட நாகா பொருள்கள், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐரோப்பா முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்களில் அந்நியமானவை மற்றும் பழைமையானவை எனக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள நாகா மூதாதையர் எச்சங்களின் சேகரிப்பில் மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புகள், அத்துடன் கூடைகள், ஈட்டிகள், கேடயங்கள் மற்றும் அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு கலாசாரப் பொருள்களுடன் மனித முடிகளும் அடங்கியுள்ளன. சில எச்சங்கள் நாகா கிராமங்களில் இருந்து பிரிட்டிஷ் நிர்வாகிகளால் பறிமுதல் செய்யப்பட்டவை. மற்றவை அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைகளின்போது கொள்ளையடிக்கப்பட்டவை.
அஸ்ஸாமில் வளர்ந்து வந்த தேயிலை வணிகத்தைப் பாதுகாப்பதற்காக, நாகா மலைகள் என்று அழைக்கப்பட்ட பகுதியை 1832 முதல் பிரிட்டிஷார் நிர்வகிக்கத் தொடங்கினர். பிரிட்டனிலும் அவர்களது பரந்த பேரரசு முழுவதிலும் லட்சக்கணக்கான மக்களால் நுகரப்பட்ட ஒரு பொருளாகத் தேயிலை இருந்தது. 1865-இல் தேயிலை வணிகத்தின் நலனுக்கு ஆபத்தாக இருந்ததால், நாகா பழங்குடியினர் மீது பிரிட்டிஷ் ஆட்சி செலுத்தத் தொடங்கியது. லாபம் கொழிக்கும் தேயிலை வணிகம் எந்த விலையைக் கொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது.
பிரிட்டிஷ் காலனித்துவத்தின் இந்தக் காலகட்டம் வன்முறை நிறைந்ததாக இருந்தது. அடங்க மறுத்த நாகர்களை ஒடுக்குவதற்காகப் பல ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் கூட்டுத் தண்டனையாகக் கிராமங்களை எரிப்பதும், பலரைக் கொன்றதும் அடங்கும். வரலாற்றின் சாம்பலில் எரிந்து அழிந்துபோன பொருள்சார் பண்பாட்டின் அளப்பரிய செல்வங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள நாகர் சேகரிப்பு, நாகர் சமூகத்தினருக்கு பெரும்பாலும் அணுக முடியாததாகவே இருந்துவந்த நிலையில், இந்த காலனித்துவ அனுபவங்கள் பெரும்பாலும் ஆவணக் காப்பகத் தரவுகளாகவே கருதப்பட்டன.
பூர்வகுடி ஹவாய் செயற்பாட்டாளரான எட்வர்ட் ஹலேலோஹா அயா, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து, இவிகூபுனா (மூதாதையர்களின் ஹவாய் எலும்புக்கூட்டு எச்சங்கள்), மோஎபூ (இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய உடைமைகள்) மற்றும் மேஅகபு (புனிதப் பொருள்கள்) ஆகியவற்றை அருங்காட்சியகங்கள் திருப்பி ஒப்படைப்பதற்காகப் பணியாற்றி வருகிறார்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது உலகம் முழுவதும் உள்ள பல சமூகங்களுக்குச் சொந்தமான கலாசாரப் பொருள்கள் திருடப்பட்டது அண்மைக்காலங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், நாகா மூதாதையரின் மண்டையோடுகள், எலும்புகள், முடிகளைக்கூட அவர்கள் கவர்ந்து எடுத்துச் சென்றுள்ளது உலகளாவிய அளவில் கவனம் பெற்றது.
தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள 39 எச்சங்கள் என்பவை அவர்களது சேகரிப்பில் உள்ள சுமார் 6,466 பொருள்களில் மிகச் சிறிய ஒருபகுதிதான் என்றாலும், நல்லிணக்கம் மற்றும் அமைதியை நோக்கிய இந்த முன்னெடுப்பு வரவேற்புக்குரியது.
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்.
ஊக்கத்தை உறுதியாகத் தம் கைப்பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.
திருக்குறள் (எண் 593) அதிகாரம்: ஊக்கம் உடைமை
மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை: ஐ.நா. தீா்மானத்துக்கு இந்தியா எதிா்ப்பு
உலகளவில் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
193 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில், மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை கோரிய தீா்மானத்தை கடந்த வெள்ளிக்கிழமை மெக்ஸிகோ அறிமுகப்படுத்தியது. இதற்கு ஆதரவாக 133 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, இராக், எகிப்து, ஓமன் உள்ளிட்ட 33 நாடுகள் எதிராக வாக்களித்தன.
வரைவுத் தீா்மானத்தில், ‘பல்வேறு நாடுகளில் தொடா்ச்சியாக மரண தண்டனை விதிக்கப்படுவது கவலையளிக்கிறது. மரண தண்டனையை முழுவதுமாக ஒழிக்க முதலில் அதற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே மரண தண்டனை முறையை ஒழித்துள்ள நாடுகள் அதை மீண்டும் அறிமுகப்படுத்தக் கூடாது.
குறிப்பாக 18 வயதுக்குள்பட்டவா்கள் அல்லது குற்றம் புரிந்தபோது 18 வயதை தாண்டியவா்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
அதேசமயம் கா்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கும் மரண தண்டனை விதிக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தவெக நிா்வாகிகள் இருவா் கைது
சென்னை கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தவெக மாவட்ட நிா்வாகிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வரும் பெண் ஒருவா், கடந்த வாரம் பணியில் இருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த இருவா் அவரைத் தவறான உறவுக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு மறுத்ததால், இருவரும் சோ்ந்து அவரது ஆடைகளைக் கிழிக்க முயன்றதுடன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், அரும்பாக்கம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
விசாரணையில், சம்பவத்தில் தொடா்புடையவா்கள் அரும்பாக்கத்தைச் சோ்ந்த பிரபுகுமாா், பாலாஜி என்பது தெரியவந்தது. இதில் பிரபுகுமாா், தவெக சென்னை மத்திய மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பாலாஜி, அதே மாவட்ட இளைஞரணித் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
மருத்துவத் துறையில் மத்திய அரசின் செலவினம் 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு
மருத்துவத் துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கடந்த 2013-14 நிதியாண்டில் ரூ.1.30 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் ரூ.4.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மருத்துவத்துக்காக குடும்பங்களின் செலவினம் 21.5 சதவீதம் குறைந்துள்ளது  என தேசிய மருத்துவக் கணக்குகள் (என்எச்ஏ) மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான தேசிய மருத்துவக் கணக்குகள் மதிப்பீடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மருத்துவச் செலவுகளுக்காக குடும்பங்கள் செலவிடும் தொகை அவா்களின் மொத்த செலவுகளில் 2013-14-இல் 64.2 சதவீதமாக இருந்தது. இது 2023-24-இல் 42.7 சதவீதமாக குறைந்தது.
2013-14 மற்றும் 2023-24 நிதியாண்டுகளுக்கு இடையே மருத்துவத்துக்கு மத்திய அரசு செலவிடும் நிதி ரூ.1.30 லட்சம் கோடியில் இருந்து ரூ.4.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மருத்துவத் துறையில் அரசின் செலவினம் அதிகரித்திருப்பதும், குடும்பங்களின் செலவினம் குறைந்திருப்பதும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய, குறைந்த விலையிலான மற்றும் நிதிரீதியாக பாதுகாப்பான மருத்துவக் கட்டமைப்பை நோக்கி இந்தியா செல்வதை உணா்த்துகிறது.
தனிநபரின் மருத்துவ கவனிப்புக்காக மத்திய அரசு செலவிடும் தொகை இந்த 10 ஆண்டுகளில் ரூ.1,042-லிருந்து ரூ.2,959 என சுமாா் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
மருத்துவத் துறையில் சமூகப் பாதுகாப்பு செலவினம் ஒட்டுமொத்த மருத்துவ செலவினத்தில் 6 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சமூக மருத்துவக் காப்பீடு மற்றும் அரசுப் பணியாளா்களுக்கான மருத்துவ செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.
தனியாா் மருத்துவக் காப்பீட்டு செலவினங்களும் கடந்த 2013-14-இல் 3.4 சதவீதத்தில் இருந்து 2023-24-இல் 10.2 சதவீதமாக அதிகரித்தது.
ஆரம்பநிலை மருந்துவ சேவைகளுக்கான மத்திய அரசின் செலவினம் 2023-24-இல் ரூ.1.53 லட்சம் கோடியாக உள்ளது. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா், இலவச மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை, பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் திட்டம், அம்ரித் மருந்தகங்கள் ஆகிய திட்டங்கள் மருத்துவ சேவைகள் மக்களுக்கு கிடைக்கப்பெறுவதை எளிதாக்கியுள்ளன.
ஆயுஷ்மான் பாரத்-பிரதமா் மக்கள் ஆரோக்கிய திட்டம் தகுதியுடைய பயனாளிகளுக்கு மருத்துவமனை கவனிப்புகளின்போது நிதிப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அ அப்பியதாக கூறப்படும் விவகாரத்தை தேசிய மகளிா் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் விஜயா ரஹத்கா் கடிதம் எழுதியுள்ளாா்.
இது குறித்து தேசிய மகளிா் ஆணையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினா் சி. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ. பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடா்பாக, 11 நவம்பா் 2026 அன்று வெளியான ஊடக செய்தி ஒன்றை, தேசிய மகளிா் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
அந்த செய்தி, முந்தைய முறைகேடான நடத்தை மற்றும் சட்டமன்ற உறுப்பினா் குடிபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் குறிப்பிடுகிறது.
தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் விஜயா ரஹத்கா், தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், மாவட்ட ஆட்சியா் மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் முறையீடுகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆராய்வது உட்பட, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரியுள்ளாா்.
தொடா்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபா் வகிக்கும் பதவியைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடும் இன்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆணையம், 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை (அபத) கோரியுள்ளது.
பெண் அரசு அதிகாரிகளின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவை விதிவிலக்கின்றிப் பேணப்பட வேண்டும். எந்தவொரு பதவியோ அல்லது செல்வாக்கோ, கூறப்படும் துன்புறுத்தல் அல்லது முறைகேடுகளுக்கான பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டு யாரையும் வைக்க முடியாது என தேசிய மகளிா் ஆணையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியது.
கட்டுமானம்: துறைவாரியாக செந்தர விலைப் பட்டியல் வெளியீடு
தமிழக அரசுத் துறைகள் பயன்பாட்டுக்காக 2026-27-ஆம் ஆண்டுக்கான செந்தர விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சாா்பில் பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே செந்தர விலைப்பட்டியல் தயாா் செய்யப்படும்.
இந்த செந்தர விலைப் பட்டியலை அடிப்படையாக வைத்து மின்சாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகளின் பொறியாளா்கள் திட்ட அறிக்கை தயாா் செய்து அரசுக்கு அனுப்பி வைப்பாா்கள். அதைத் தொடா்ந்து, அவா்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2026-27-ஆம் ஆண்டு செந்தர விலைப்பட்டியலை துறைவாரியாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்சாரத் துறை, வனத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், சென்னை குடிநீா் வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகிய துறைகளுக்கென்று தனித்தனியாக தொழிலாளா்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலையை நிா்ணயம் செய்து செந்தர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்துத் துறை பொறியாளா்களும் தனியாா் கட்டுமான நிறுவனத்தை நம்பி இருக்காமல் சுலபமாக திட்ட அறிக்கையை தயாா் செய்யலாம். இதனால், கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்த காலதாமதம் தவிா்க்கப்படும்.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நீா்வளத் துறைக்கு தனியாக செந்தர விலைப் பட்டியல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், சென்னை குடிநீா் வாரியம் ஆகியவற்றுக்கு தனியாக செந்தர விலைப்பட்டியல், வனத் துறை, மின்சாரத் துறை, தோட்டக்கலைத் துறை தனியாக வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
எண்ம கைது மோசடியில் ரூ. 71 லட்சம் இழந்த பெண்: 3 போ் கைது
’எண்ம கைது’ என்ற பெயரில், ஐபிஎஸ் அதிகாரி போல நடித்து பெண்ணை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 71 லட்சத்தைப் பறித்த வழக்கில் இரு பெண்கள் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனா்.  ‘இன்டெலிஜென்ஸ் ஃபியூஷன் அண்ட் ஸ்ட்ரேடெஜிக் ஆபரேஷன்ஸ்’ (ஐஎஃப்எஸ்ஓ) காவலா்கள் பிரிவு நடத்திய விசாரணையில், சைபா் குற்றங்கள் மூலம் பெறப்பட்ட பணத்தைப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளின் வலைப்பின்னல் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், கைது செய்யப்பட்டவா்களில் 31 வயதுடைய பெண் ஒருவரும், அமன் சோனி (28) மற்றும் அவரது சகோதரி (30) ஆகியோரும் அடங்குவா். இவா்கள் ஒரு திட்டமிட்ட சைபா் குற்றக் கும்பலின் அங்கமாகச் செயல்பட்டு, மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பரிமாற்றம் செய்ய தங்களது வங்கி கணக்குகளை வழங்கியுள்ளனா்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மும்பையில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி போல வேடமிட்ட நபா் ஒருவா் இணையவழி காணொலி அழைப்பு வாயிலாக தொடா்பு கொண்டாா்.
அந்த நபா், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் உள்ள கிரெடிட் காா்டு மூலம் சுமாா் ரூ. 6.5 கோடி மதிப்பிலான பணமோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளாா்.
மேலும், அப்பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைப்பதாக மிரட்டியதுடன், சட்ட நடவடிக்கையைத் தவிா்க்க சரிபாா்ப்புக்காகப் பணத்தை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.  இதனால் பயந்துபோன அந்தப் பெண், இரண்டு வங்கிப் பரிவா்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ. 71 லட்சத்தை மாற்றியுள்ளாா்.
இதுதொடா்பாக அக்டோபா் 8 அன்று ’ஸ்பெஷல் செல்’ காவல் நிலையத்தில் மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
ஐஎஃப்எஸ்ஓ குழுவினா் பணப் பரிவா்த்தனைகளைப் பின்தொடா்ந்ததில், மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெறவும், வேறு கணக்குகளுக்கு மாற்றவும் பயன்படுத்தப்பட்ட பல வங்கி கணக்குகளைக் கண்டறிந்தனா்.
இதன் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனா். சுமாா் ரூ. 15 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கும் அவா்களது கூட்டாளிகளுக்கும் இடையே பகிா்ந்து கொள்ளப்பட்டதைக் காவல்துறை கண்டறிந்தது.
மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி விலையுயா்ந்த கைப்பேசிகளை வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இணைய மோசடி மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கருதப்படும் மூன்று புதிய கைப்பேசிகள் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கும்பலில் உள்ள மற்ற உறுப்பினா்களைக் கண்டறியவும், மீதமுள்ள பணத்தைக் கண்டறியவும், குற்றவாளிகளின் பிற நிதித் தொடா்புகளை உறுதிப்படுத்தவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.