9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட
9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை, மே 27:  சென்னை, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை மாற்றப்பட்டனர்.

  இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

  எம். சந்திரசேகரன் - திருவாரூர் ஆட்சியர் (பொதுத் துறை இணைச் செயலாளர்)

  டி. உதயசந்திரன் - மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநர் (திருவாரூர் ஆட்சியர்)

  பங்கஜ்குமார் பன்சால் - வேளாண் துறை இயக்குநர் (சிவகங்கை மாவட்ட ஆட்சியர்)

  டாக்டர் பி. உமாநாத் - கோவை மாவட்ட ஆட்சியர் (நிதித் துறை துணைச் செயலாளர்)

  வி. பழனிகுமார் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் (கோவை மாவட்ட ஆட்சியர்)

  டாக்டர் ஆர். பழனியாண்டி - பொதுத் துறை இணைச் செயலாளர் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்)

  எம். ஜெயராமன் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் (நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்)

  மைதிலி கே. ராஜேந்திரன் - தொழில் துறை துணைச் செயலாளர் (சென்னை மாவட்ட ஆட்சியர்)

  வி. ஷோபனா - சென்னை மாவட்ட ஆட்சியர் (சமூக நலத் துறை மற்றும் மதிய உணவுத் திட்ட துணைச் செயலாளர்)

  பி. சீதாராமன் - கடலூர் மாவட்ட ஆட்சியர் (மதுரை மாவட்ட ஆட்சியர்)

  என். மதிவாணன் - மதுரை மாவட்ட ஆட்சியர் (ஒழுங்கு நடவடிக்கைகள் துறை ஆணையர்)

  ராஜேந்திர ரத்னூ - பொதுத் துறை துணைச் செயலாளர் (கடலூர் மாவட்ட ஆட்சியர்)

  ஜி.சுந்தரமூர்த்தி - ஒழுங்கு நடவடிக்கைகள் துறை ஆணையர் (திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்)

  இவர்களைத் தவிர, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய துறைகளைச் சேர்ந்த 6 செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

  தயானந்த் கடாரியா - தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர்)

  அதுல்ய மிஸ்ரா - போக்குவரத்துத் துறை செயலாளர் (தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்)

  தேபேந்திரநாத் சாரங்கி - சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் (போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர்)

  சத்யபிரதா சாகு - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் (தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை மேலாண் இயக்குநர்)

  சுதீப் ஜெயின் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆணையர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்)

  ஆர்.தியாகராஜன் - நிதித் துறை சிறப்புச் செயலாளர் (தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர்)

  டாக்டர் எம்.வீரசண்முக மணி - உணவுப் பொருள் வழங்கல் துறை மேலாண் இயக்குநர் (பொதுத் துறை கூடுதல் செயலாளர்).

  தேர்தல் பணியில் இருந்து விடுவிப்பு...   மக்களவைத் தேர்தலை ஒட்டி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார் டாக்டர் கே.சத்தியகோபால். தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாகம் மற்றும் நில சீர்திருத்தத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக இருந்த கிறிஸ்துதாஸ் காந்தி, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை இரவு பிறப்பிக்கப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றம்

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கே. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மாற்றம் செய்யப்பட்டார்.

  இதையடுத்து சென்னை மாநகர காவல்துறையின் 96-வது புதிய போலீஸ் கமிஷனராக டி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

  இதுகுறித்து அரசின் உள்துறை முதன்மைச் செயலர் எஸ். மாலதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  மாநகர போலீஸ் கமிஷனர் கே. ராதாகிருஷ்ணன், மாநில சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆக மாற்றப்பட்டுள்ளார்.

  இதே பதவியிடத்தில் இருந்த ஏடிஜிபி டி. ராஜேந்திரன், மாநகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

  சென்னை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனராக பதவி வகித்த ஏ.கே. விஸ்வநாதன், சென்னை போலீஸ் தலைமையிட ஐ.ஜி. ஆக மாற்றப்பட்டுள்ளார்.

  இப் பதவியிடத்தில் இருந்த ஜே.கே. திரிபாதி, சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி. ஆக மாற்றப்பட்டுள்ளார். இவர் சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுவார்.

  சென்னை போலீஸ் அகாதெமி ஐ.ஜி. கே. நந்தபாலன், மதுரை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இப் பதவியிடத்தில் இருந்த ஆபாஷ்குமார், சென்னை போலீஸ் அகாதெமி ஐ. ஜி. ஆக மாற்றப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com