திருவதிகை சிவன் கோயிலில் புத்தர் சிலை

பண்ருட்டி, செப். 20:   கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள திருவதிகையில் உள்ளது புகழ் பெற்ற ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில்.   திருநாவுக்கரசரால் முதல்முதலாக தேவாரப் பாடல்
திருவதிகை சிவன் கோயிலில் புத்தர் சிலை

பண்ருட்டி, செப். 20:   கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள திருவதிகையில் உள்ளது புகழ் பெற்ற ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில்.

  திருநாவுக்கரசரால் முதல்முதலாக தேவாரப் பாடல் பாடப் பெற்ற தலம் இது.

  இக் கோயிலின் கர்ப்பக்கிரக விமானத்தை பார்த்துதான் தஞ்சை பெரிய கோயிலை ராஜ ராஜ சோழன் கட்டினார் என்பது உள்ளிட்ட பல சிறப்புகளை பெற்ற இக்கோயிலின் ராஜ கோபுரத்தின் வலப்புறம் புத்தர் சிலை கலை நயத்துடன் உள்ளது. இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது:

  திருவதிகை முன்னொரு காலத்தில் அதிராஜமங்கலபுரம் என்ற பெயரில் விளங்கியது. விஜய நகர, நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் "திருவதிகை ராச்சியம்' என அழைக்கப்பட்டது.

   சைவம், வைணவம் தழைத்திருந்த இப் பகுதியில் பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் பெüத்தமும், சமணமும் வளர்ச்சி பெற்று இருந்தன என வரலாற்று சான்றுகள் மூலம் அறியமுடிகிறது.

  திருநாவுக்கரசர் வாழ்ந்த 7-ம் நூற்றாண்டில் பெüத்தமும், சமணமும் வீழ்ச்சியை நோக்கின. அவர் சமணத்தை விட்டு சைவத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, குணபரனான மகேந்திர வர்ம பல்லவ மன்னனும் சைவ சமயத்துக்கு மாறினான்.

  இதன் விளைவாக கடலூரில் இருந்த சமணக் கோயிலை இடித்து, அக்கற்களைக் கொண்டு திருவதிகையில் சிவன் கோயிலை கட்டி, சிவனோடு தன் பெயரை சேர்த்து குணபர ஈச்சரம் என அக்கோயிலுக்குப் பெயர் சூட்டினார்.

  திருவதிகையில் பெüத்த மதம் தழைத்து இருந்தது என்பதற்கு, இக்கோயிலுக்குள் சுமார் 3 அடி உயரத்தில் கம்பீரமாய் இருக்கும் ஒரே ஒரு புத்தர் சிலை மட்டும்தான் தற்போது சாட்சியாக உள்ளது என்றார் அவர்.

  புத்தர் சிலை இருந்த புத்த விகாரம் (கோயில்) இப்போது இல்லை என்றாலும், சிவன் கோயில் வளாகத்தில் ஞானத்தை போதித்துக் கொண்டு இருக்கும் புத்தரை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.



பெüத்த மதம் 9 மற்றும் 10-ம் நூற்றாண்டில் சிறப்பாக இருந்தது என்பதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுப் பாடல் மூலம் அறிய முடிகிறது.

  "போதியி னீழற் புனிதர்க் கிறையிலிசெய்

  தாதி யதிகையின்

  வாயாங்கமைத்தான்-மாதர் முலை

  நீசுழக்கா ணாகத்து நேரலரைத் தன்யானைக்

  கோடுழக்காண் கூத்தன் குறித்து'

என்கிறது அந்தப் பாடல்.

  அதாவது, இளமாதர்களின் கொங்கைகளைப் போன்ற தந்தங்களையுடைய தன் பட்டத்து யானையை கொடிய பகைவர்களின் மீது ஏவச் செய்து, அவர்களின் உடம்பில் கோடிட்டும், குத்திக்கிழித்தும் எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்த மணவிற்கூத்தன், போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்ற புனிதரான புத்தர் பிரான் கோயிலுக்கு கொடைகள் பலவற்றை அளித்து, அக்கோயிலுக்கு புதிய வாயில் ஒன்றை அமைத்தான்' என்கிற பொருளைக் கூறுகிறது இக் கல்வெட்டு பாடல். திருவதிகை சிவன் கோயிலுக்குள் தற்போது காணப்படும் புத்தர்சிலை கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வடிவமைப்பில் உள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com