ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: ஸ்டாலின்

சென்னை, ஜன.12: ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் 303 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார். தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர
ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: ஸ்டாலின்

சென்னை, ஜன.12: ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் 303 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக 990 ஆரம்பப் பள்ளிகள், 209 நடுநிலைப் பள்ளிகள், 83 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,367 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து வேலைவாய்ப்பக மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 46 அருந்ததிய இனத்தைச் சேர்ந்தவர் உள்பட 303 ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் தமிழரசி, செயலாளர் விஸ்வநாத் ஷெகாவ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com