எஸ்.ஐ. கொலை குற்றவாளிகளை கண்டறிய பாளை. சிறையில் அடையாள அணிவகுப்பு

திருநெல்வேலி,ஜன.12: ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்}இன்ஸ்பெக்டர் இரா. வெற்றிவேல் கொலை வழக்கில் குற்றவாளிகளை உறுதி செய்ய, பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடையாள அணிவகுப்பு நீதிபதி முன்னிலையில்
எஸ்.ஐ. கொலை குற்றவாளிகளை கண்டறிய பாளை. சிறையில் அடையாள அணிவகுப்பு

திருநெல்வேலி,ஜன.12: ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்}இன்ஸ்பெக்டர் இரா. வெற்றிவேல் கொலை வழக்கில் குற்றவாளிகளை உறுதி செய்ய, பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடையாள அணிவகுப்பு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

÷ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்}இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆம்பூர் அருகே 7 ஆம் தேதி ஒரு கும்பலால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

÷வெற்றிவேலை எதிரிகள் தாக்கும்போது, அங்கு கடையநல்லூர் செல்வதற்காக வந்த மாநில சுகாதாரத் துறை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரி மற்றும் காவலர்கள் அந்த கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தி விரட்டினர்.

இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடையம் சப் }இன்ஸ்பெக்டர் சிவ சுப்பிரமணியத்தைக் கொலை செய்ய வந்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கும்பல், தவறுதலாக வெற்றிவேலை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

÷மேலும் கடையம் சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனுக்கும், அவரது மனைவி சிவகாமிக்கும் இடையே நடைபெறும் விவாகரத்து வழக்கு தொடர்பான பிரச்னையிலேயே இக் கொலை நடந்திருப்பதும்  கண்டறியப்பட்டது.

÷இது தொடர்பாக எதிரிகளைக் கைது செய்வதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸôர் சிவகாமியின் சகோதரர் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரைச் சேர்ந்த கந்தசாமி, ஓய்வு பெற்ற சப்}இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த பலவேசம் மகன் கள்ளபிரான் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனர்.

÷திங்கள்கிழமை சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். சிவகாமியின் மற்றொரு சகோதரர் சுப்பிரமணியன் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நாகர்கோவில் நீதிமன்றத்தில் சிவகாமியின் மற்றொரு சகோதரர் கண்ணன் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

÷அடையாள அணிவகுப்பு இந் நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கந்தசாமி, கள்ளபிரான் ஆகியோரை சம்பவ இடத்தில் சாட்சிகள் பார்த்ததை உறுதி செய்யும் விதமாக, அடையாள அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷சாட்சிகளாக அமைச்சர் எம்.ஆர். பன்னீர்செல்வம் பாதுகாப்புக்கு வந்த மதுரை ஆயுதப்படை சப்}இன்ஸ்பெக்டர் மணி, காவலர்கள் துரைமுருகன், பாலமுருகன், ஜீப் டிரைவர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு எதிரிகளை அடையாளம் காட்டினர்.

÷இந்த நிகழ்வு திருநெல்வேலி மூன்றாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் நடைபெற்றது.

÷இதேபோல வெற்றிவேலை வெட்டும்போது, சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படும் அனைத்து எதிரிகளுக்கும் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்தில் இருந்தது உறுதி செய்யப்படும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.

÷மேலும் இந்த அடையாள அணிவகுப்பு, வழக்கின் விசாரணையின்போது எதிரிகளுக்கு நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு உதவும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com