சுயநிதி கலை கல்லூரி தொடங்க விண்ணப்பிக்க 31 வரை காலம் நீட்டிப்பு

சென்னை, ஜன.12: சுயநிதி கலை அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 31}ம் தேதி வரை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பங்க
சுயநிதி கலை கல்லூரி தொடங்க விண்ணப்பிக்க 31 வரை காலம் நீட்டிப்பு

சென்னை, ஜன.12: சுயநிதி கலை அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 31}ம் தேதி வரை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 15.11.2009 கடைசி நாளாக ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது.

 தற்போது இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் 31.01.2010 வரை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2010}2011 கல்வியாண்டு முதல் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி தொடங்கிட பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஸ்ரீங்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com