நிரம்பி வழியும் பஸ், ரயில்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
நிரம்பி வழியும் பஸ், ரயில்கள்

சென்னை, ஜன. 12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து மட்டும் திருச்சி-  மதுரை - திருநெல்வேலி - கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் 6 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதனால் பஸ், ரயில்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் தவிக்கும் நிலை தொடருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஜனவரி 13}ம் தேதி முதல் 17}ம் தேதி வரை தொடர் விடுமுறையாகும்.

ரயில்களைப் பொருத்தவரை 90 நாள்களுக்கு முன்பாகவே அனைத்து முக்கிய ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. இதையடுத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு உடனடியாக முடிந்து விட்டது.

கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னையிலிருந்து நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (ஜன.13) தொடங்குகிறது.

எனினும் தஞ்சாவூர், ராமேசுவரம் மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில் சேவைகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அரசு விரைவு பஸ்களிலும்...: நீண்ட தொலைவு அரசு விரைவு பஸ்களிலும் ஏற்கெனவே முன்பதிவு முடிந்து விட்டது. கோயம்பேடு பஸ் நிலையத்தில், வெளியூர் பஸ்களில் செல்ல டிக்கெட் வாங்க ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர்.

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்: ரயில், பஸ்கள் நிரம்பி வழிவதையடுத்து ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டண வசூல் தடையின்றி தொடர்கிறது.

இதையடுத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல லாரி, வேன் டிரைவர்களின் கருணையை பயணிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

சிறப்பு பஸ்களாக மாறும் டவுன் பஸ்கள்: பொங்கல் நெரிசலைச் சமாளிக்க சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதற்காக டவுன் பஸ்களை விரைவு பஸ்களாக மாற்றி இயக்கவும் அந்தந்த போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

மதுரை, நாகர்கோவிலுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்

சென்னை, ஜன. 12: சென்னையில் இருந்து மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முக்கிய ரயில்களும் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து, நெரிசலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் விவரம்:

திருநெல்வேலி} சென்னை எழும்பூர் (ஈரோடு வழி) சிறப்பு ரயில் (0614): திருநெல்வேலியில் இருந்து இந்த ரயில் ஜனவரி 13}ம் தேதி பிற்பகல் 3.45}க்கு  புறப்பட்டு, மறுநாள் காலை 8.30}க்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர்} நாகர்கோவில் சிறப்பு ரயில் (0617): இந்த ரயில் எழும்பூரில் இருந்து 14}ம்தேதி பிற்பகல் 2.40}க்குப் புறப்பட்டு, நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்று சேரும்.

நாகர்கோவில்} சென்னை எழும்பூர் (திருவனந்தபுரம் வழி) சிறப்பு ரயில் (0618):

இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து 15}ம் தேதி காலை 10} மணிக்குப் புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 5.15 மணிக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர்} மதுரை அதிவிரைவு சிறப்பு ரயில் (0619): இந்த ரயில் எழும்பூரில் இருந்து 16}ம்தேதி மாலை 6.45}க்குப் புறப்பட்டு, மதுரைக்கு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்று சேரும்.

இன்று முன்பதிவு: இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு புதன்கிழமை தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com