பென்னாகரம்: வன்னிய சமுதாய அரசு ஊழியர்கள் இடமாற்றம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை, ஜன.12: பென்னாகரம் இடைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித
பென்னாகரம்: வன்னிய சமுதாய அரசு ஊழியர்கள் இடமாற்றம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை, ஜன.12: பென்னாகரம் இடைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

""பென்னாகரம் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது யாருக்கும் தெரியாது. அதற்குள், திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல்கள், சட்ட விரோத நடவடிக்கைகள், தொகுதியில் தார்ச் சாலைகள் போடுவது, இலவசங்களை அள்ளிக் கொடுப்பது போன்றவை தாராளமாக நடைபெற்று வருகின்றன.

இன்னொருபுறம், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கும் அரசு அலுவலர்கள், ஆசியர்கள் இடையே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இனம் கண்டறியப்பட்டு மாறுதல் என்ற பெயரில் வெளியிடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் பந்தாடப்பட்டு வருகிறார்கள்.

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்குப் பொறுப்பு வகிக்கிற இணை இயக்குநர் இங்கேயே முகாமிட்டு ஆளுங்கட்சியினர் யார் யாரை மாற்ற வேண்டும் என்று குறித்துக் கொடுக்கிறார்களோ, அவர்களை எல்லாம் வேறு இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்வதற்கான உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்துக் கொண்டு வருகிறார்.

கல்வித் துறையில் பணியிட மாற்றங்கள் என்பது கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும். இடையில் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவதில்லை.

தேர்தல் ஆதாயத்துக்காக விதிமுறைகள், நடைமுறைகளை மீறி பென்னாகரம் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்களை மட்டும் கல்வித் துறையினர் ஆண்டின் மத்தியில் இடமாற்றம் செய்வது, ஆசியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிருப்தியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆசிரியர்களைப் போன்று அரசு ஊழியர்களிலும் யார்? யார்? வன்னியர்களோ, அதிலும் குறிப்பாக யார் பாமகவின் அனுதாபிகள் என்று ஆளுங்கட்சியினர் சுட்டிக் காட்டுகிறார்களோ அவர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

இதற்காக, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பென்னாகரம் தொகுதியிலேயே முகாமிட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்தகைய அத்துமீறல்களுக்கு அதிகாரிகள் துணைபோவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இல்லை எனச் சொல்லி, ஆளும்கட்சியினரின் முறைகேடான மிரட்டல் நடவடிக்கைகளையும், அத்துமீறல்களையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருந்து விடக்கூடாது.

இந்த இடமாறுதலை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாகி துன்புறுகின்ற ஆசிரியர்களையும், அரசு அலுவலர்களையும் பாதுகாக்க பாமக மாநிலம் தழுவிய பெரும் போராட்டம் நடத்தும்.

அத்தகைய போராட்டச் சூழலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும், குறிப்பாக முதல்வருக்கும், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் இருக்கிறது'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com