தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விலை உயர்வால் தவிக்கும் சத்துணவு மையங்கள்: சத்துணவில் காய்கறிகளைத் தேடும் குழந்தைகள்!

கோவை : காய்கறி விலை உயர்வு காரணமாக அரசுப் பள்ளிகளில் சத்துணவில் காய்கறிகள் சேர்ப்பது குறைந்துவிட்டது. சத்துணவில் காய்கறிகளைத் தேடும் பரிதாப நிலை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.  காய்கறி விலை உயர்வு காரண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:43 am

கே.கே.மணிகண்டன்

கோவை : காய்கறி விலை உயர்வு காரணமாக அரசுப் பள்ளிகளில் சத்துணவில் காய்கறிகள் சேர்ப்பது குறைந்துவிட்டது. சத்துணவில் காய்கறிகளைத் தேடும் பரிதாப நிலை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 காய்கறி விலை உயர்வு காரணமாக அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள அளவுக்குக் கூட காய்கறிகளை சாப்பாட்டில்

 தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 55 லட்சம் மாணவர்கள்: தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை 55 லட்சம் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். தலா ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 32 பைசா, மளிகைப் பொருள்களுக்கு 14 பைசா, விறகுக்கு 24 பைசா வீதம் மொத்தம் 70 பைசா வீதம் சத்துணவுக் கூடங்களுக்கு அரசு வழங்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்துதான் 70 பைசா வீதம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்னர் 44 பைசா வீதம்தான் வழங்கப்பட்டது.

 ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு தலா 100 கிராம் அரிசி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தலா 150 கிராம் வீதம் அரிசியும் இரு பிரிவுக்கும் தலா 15

 கிராம் பருப்பும், 3 கிராம் எண்ணெய் அரசால் வழங்கப்படுகிறது.

 வாரத்தில் 5 தினங்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் சத்துணவுக் குழந்தைகளுக்கு தலா 20 கிராம் அளவுக்கு உருளைக் கிழங்கை வேகவைத்து தனியாகத் தர வேண்டும்.

 அதிகரித்துவரும் காய்கறி விலை, மளிகைப் பொருள்கள் விலை, விறகு விலைக்கும் சத்துணவுக்கு அரசு தரும் தொகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்கின்றனர் சத்துணவு அமைப்பாளர்கள்.

 காய்கறி விலை உயர்வு காரணமாக, சத்துணவு நிலைமை குறித்து சத்துணவு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி கூறியது:

 காய்கறி,மளிகைப் பொருள்கள், விறகு விலை உயர்வு காரணமாக சத்துணவு சமைக்க கூடுதல் செலவாகிறது. சத்துணவு அமைப்பாளர்கள் மாதந்தோறும் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து ரூ. 400 வரை செலவு செய்து காய்கறிச் செலவையும், விறகுச் செலவையும் சமாளிக்கின்றனர். தாங்களும் அரசு ஊழியர்களாகிவிடுவோம் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

 தலைவர்கள் பிறந்த நாளின்போது சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு பொங்கல் வழங்க வேண்டும். இதற்காக தலா ஒரு குழந்தைக்கு 33.5 பைசா அரசு தருகிறது. 50 குழந்தைகள் இருந்தால் ரூ.17 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை சரியாக இருக்குமா?.

 வெளிமார்க்கெட்டில் வெல்லம் கிலோ ரூ. 40க்கும் கூடுதலாக விற்கப்படுகிறது.

 தினமும் கீரை சேர்க்க வேண்டும். வாரத்தில் 5 நாள்கள் முட்டை வழங்கப்படுகிறது. ஒரு முட்டை 45 கிராம் இருக்க வேண்டும். ஆனால், சத்துணவுக்குத் தரப்படும் முட்டை 25 கிராம் எடை அளவுக்கு உள்ளது. குழந்தைகளுக்கு தலா ரூ. 2 வீதம் வழங்கினால்தான் தரமான சத்துணவு கிடைக்க வழி பிறக்கும் என்றார்.

 அங்கன்வாடி மையம்: அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் எஸ். ஜானகி கூறியது:

 தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் 52 ஆயிரம் உள்ளன. 2 முதல் 5 வயது

 வரையிலான குழந்தைகள் ஒவ்வோர் மையத்திலும் 10 முதல் 40 வரை உள்ளனர். தலா ஒரு குழந்தைக்கு 80 கிராம் அரிசி, 10 கிராம் பருப்பு, எண்ணெய் 2 கிராம் வீதம் வழங்கப்படுகிறது. இதுதவிர தலா ஒரு குழந்தைக்கு காய்கறிக்கு 25 பைசா, விறகுச் செலவுக்கு 19 பைசா, மளிகைப் பொருள்களுக்கு 11.5 பைசா என 56 பைசா வீதம் வழங்கப்படுகிறது.

 கடந்த 2 மாதங்களுக்கு முன்புவரை 43.5 பைசா வீதம்தான் தரப்பட்டது. 10 குழந்தைகள் உள்ள மையத்துக்கு காய்கறிக்கு ரூ.2.50 பைசா தரப்படும் நிலையில், காய்கறி, கீரை வாங்கி சமைக்க வேண்டும். காய்கறி விலை உயர்வு காரணமாக போதுமான காய்கறிகளை சத்துணவில் சேர்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு தலா ரூ.1 வீதம் வழங்கினால்தான் தரமான உணவு குழந்தைகளுக்குச்

 சென்றடையும் என்றார்.

 ஊட்டத்து மிக்க குழந்தைகள் உருவாக முட்டை மட்டுமே சரிநிகர் உணவாக அமையாது, சத்தான காய்கறிகளும் சத்துணவில் தேவை என்பதை அரசுதான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.