காமாட்சி அம்மன் கோயிலில் விஜயகாந்த் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம், ஜன. 29: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார்.  ÷தேர்தல் நெருக்கத்தில் அவர் காமாட்சி அம்மன் கோ
காமாட்சி அம்மன் கோயிலில் விஜயகாந்த் சிறப்பு வழிபாடு
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம், ஜன. 29: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார்.

 ÷தேர்தல் நெருக்கத்தில் அவர் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தது தொண்டர்கள் மத்தியிலும் பல்வேறு கட்சிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த விஜயகாந்த், அவரது மனைவி பிரமேலதா, இரு மகன்களுக்கு கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 ÷கோயிலுக்குள் சென்ற விஜயகாந்த் அம்மனை 10 நிமிடம் தரிசித்தார். பின்னர் கோயிலை விட்டு வெளியில் வந்த விஜயகாந்திடம், கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். கேள்விகளை தவிர்த்துவிட்டு பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

 ÷கோயில் அர்ச்சகர் நடராஜ சாஸ்திரியிடம் விஜயகாந்த் சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் ஏதேனும் ஏற்பாடு செய்துள்ளாரா என்று கேட்டதற்கு, அதுபோல் யாகம் ஏதும் நடத்தவில்லை. குடும்பத்துடன் வந்து அம்மனை வழிபாட்டார் என்றார்.

 ÷தேர்தல் வெற்றிக்கும், கூட்டணி நல்ல முறையில் அமைவதற்கும் கோயிலில் அவர் சிறப்பு பிரார்த்தனை செய்திருக்கலாம் என்று காஞ்சிபுரம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக  பேசப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com