திருத்தணி நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்

திருவள்ளூர், ஜூலை 3: திருவள்ளூர்- திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக கடும் சேதமடைந்துள்ளதால் அச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.  திருவள்ளூரில் இருந்து திருத்தணி, திரு
திருத்தணி நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்
Published on
Updated on
1 min read

திருவள்ளூர், ஜூலை 3: திருவள்ளூர்- திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக கடும் சேதமடைந்துள்ளதால் அச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

 திருவள்ளூரில் இருந்து திருத்தணி, திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திருத்தணி, திருப்பதி புத்தூர், நகரி, ரேணிகுன்டா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்

 கின்றன.

 மேலும் கல்லூரி மாணவர்கள், காதல் ஜோடிகள் என ஏராளமானோர் பைக்கில் திருத்தணி மற்றும் திருப்பதிக்கு அச்சாலையில் செல்கின்றனர். அப்படி பைக்கில் செல்பவர்கள் பெரும்பாலும் மணிக்கு 60 கி.மீட்டருக்கும் மேல் வேகமாக செல்

 கின்றனர்.

 அவர்கள் சாலையில் இருக்கும் திடீர் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து எழுந்து செல்கின்றனர். மேலும் பலர் பள்ளங்களை பார்த்து திடீரென பிரேக் போடும்போது பின்னால் வரும் கார், லாரி போன்ற வாகனங்களால் மோதப்பட்டு பலத்த காயமடைகின்றனர்.

 மேலும் திருத்தணி நெடுஞ்சாலையில் மாலை நேரத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோரும் இதுபோல் சாலைப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

 திருவள்ளூரில் மாதத்துக்கு சராசரியாக 145 விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதில் 70 சதவீதம் திருத்தணி நெடுஞ்சாலையில் நடைபெறுகிறது என கூறப்படுகிறது. காரணம் திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை பல இடங்களில் மெகா பள்ளங்கள் உள்ளது தான் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

 இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறும்போது பள்ளங்கள் உள்ள இடங்களில் மட்டும் தாற்காலிகமாக தார் கொட்டி சரி செய்கின்றனர். ஆனால் அதுவும் விரைவில் பெயர்ந்து மீண்டும் பள்ளமாகிறது.

 எனவே சாலை விபத்தால் தினசரி ஏராளமானோர் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முழுமையாக அச்சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.