பூரண மதுவிலக்கு: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

மதுராந்தகம்,ஜூலை 3:  தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பரந்தாமனின் ம
பூரண மதுவிலக்கு: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

மதுராந்தகம்,ஜூலை 3:  தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பரந்தாமனின் மகள் ஒவியாவின் திருமணம் மதுராந்தகத்தை அடுத்த சோத்துபாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ்,திருமணத்தை நடத்தி வைத்துப் பேசியது:

 தமிழநாடு என்று அழைப்பதை விட குடிகார நாடு என்று அழைக்கலாம். 1971 முதல் தமிழக ஆட்சியாளர்கள் 4,5 தலைமுறையினரை குடிகாரர்களாக்கிவிட்டார்கள். ஆட்சியாளர்களுக்கு யாருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை. போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை வழங்குகிறார்கள்.

குடிகார நாட்டில் இலவசங்கள் தேவையா? சாராயக் கடைக்குப் போகும் சமுதாயம் முன்னேறாது. பூரண மதுவிலக்கை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக தலைமைச் செயலகத்தில் செயலாளர்கள் 40 பேர் உள்ளனர். இதில் 12 பேர் உயர் வகுப்பினர். ஒருவர் மட்டுமே வன்னியர் உள்ளார் என்றார் அவர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி, கட்டண்ம் இல்லா கல்வி, தரமான கல்வியை அரசு வழங்க வேண்டும். உயர்தர மருத்துவ வசதி ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். உணவுக்காக இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. மற்ற இலவசங்கள் தேவை இல்லாதது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.