தாம்பரம், ஜூலை 3: சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் ஒன்பது வயதான பெண் சிங்கம் கவிதா,கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் 3 குட்டிகளை ஈன்றுள்ளது. கவிதா மற்றும் அதன் 3 குட்டிகளும் தனி அறையில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. இப்போது பிறந்துள்ள 3 சிங்கக் குட்டிகளுடன் சேர்த்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் 24 சிங்கங்கள் உள்ளன.