சென்னை, ஜூலை 9: ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை பரிசு பெற மாற்றுத் திறனாளி சிறுவர், சிறுமியரின் வளர்ச்சிக்காக தொண்டாற்றி வரும் சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறக்கட்டளையின் கௌரவச் செயலாளர் ஆறு. ராமசாமி அறிவித்துள்ளார்.
குமாரராஜா மு.அ.மு. முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசாக மாற்றுத் திறனாளி சிறுவர், சிறுமியருக்காக பாடுபட்டு வரும் சேவை நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு பரிசுக்குரிய சேவை நிறுவனத்தை தேர்வு செய்யும்.
செப்டம்பர் 6-ம் தேதி சென்னை ராணி சீதை அரங்கில் நடைபெறும் விழாவில் இந்தப் பரிசு வழங்கப்படும். விண்ணப்பங்களை ஆகஸ்டு 5-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை, ராணி சீதை மன்றம், 603, அண்ணா சாலை, சென்னை -6.