தூத்துக்குடி, ஜூலை 14: தூத்துக்குடி பகுதியில் புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி பகுதியில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏற்கெனவே அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் 1,000 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கோஸ்டல் எனர்ஜென், இந்து பாரத் போன்ற தனியார் நிறுவனங்கள் மூலமும் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் கூடுதலாக தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 யூனிட்டுகளை அமைக்க கடந்த மே மாதம் 3-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த விரிவாக்கத் திட்டத்தை ஆட்சேபிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மற்றும் மாவட்டக் குழு முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி பகுதியில் ஏற்கெனவே சல்பர் டை ஆக்ûஸடு அளவு 30 புள்ளிகள் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுவே அபாய நிலையாகும். ஏற்கெனவே அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களும் செயல்பட தொடங்கினால் சல்பர் டை ஆக்ûஸடு அளவு 60 புள்ளிகள் என்ற நிலைக்கு உயரும் அபாயம் உள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றார் ராமகிருஷ்ணன்.