சென்னை, ஜூலை 23: இலங்கைக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு அளித்து வரும் பொருளாதார உதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. மேற்கு நாடுகளும் தங்கள் உதவியை நிறுத்தக்கூடும் எனத் தெரிகிறது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும் இந்தப் பிரச்னையில் பிரதமர் மன்மோகன்சிங் மெüனம் சாதிக்கிறார்.
இலங்கைக்கு மறைமுகமாக எல்லா உதவியையும் இந்திய அரசு செய்து வருகிறது. இந்தச் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.