ஒரே ஹோட்டலில் கருணாநிதி, அழகிரி; மற்றொன்றில் தங்கினார் ஸ்டாலின்!

கோவை, ஜூலை 23: செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியுள்ளனர்.  கட்சியின் பொருளாளர் மு
ஒரே ஹோட்டலில் கருணாநிதி, அழகிரி; மற்றொன்றில் தங்கினார் ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

கோவை, ஜூலை 23: செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

 கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், கோவை விமான நிலையம் அருகேயுள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

 ரெசிடென்சி ஹோட்டலின் 8-வது மாடி அறையில் கருணாநிதியும், 6-வது மாடி அறையில் மு.க. அழகிரியும் தங்கியுள்ளனர்.

 இருவேறு இடங்களில் இவர்கள் தங்கியிருந்ததால் கட்சியினர் மாறி மாறி ஹோட்டல்களுக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.

 தலைமைச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, தங்கம் தென்னரசு, பூங்கோதை, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை பெற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா உள்ளிட்ட நிர்வாகிகளும், கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

 மு.க.அழகிரி வருகை: செயற்குழுக் கூட்டத்தில் மு.க.அழகிரி பங்கேற்பாரா என்ற சந்தேகம் கட்சியினர் மத்தியில் இருந்தது. இதனிடையே பிற்பகல் 1.20 மணி அளவில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன், ரெசிடென்சி ஹோட்டலுக்கு வந்தார். கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

 மற்றொரு ஹோட்டலில் மு.க.ஸ்டாலின்: கோவை விமான நிலையம் அருகில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்த வண்ணம் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.