சென்னை, ஜூலை 23: சூரிய மின்னாற்றல் திட்டப் பணிகளை சினர்ஜி புராஜெக்ட்ஸ் மற்றும் சர்வீசஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்தகவல் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் பங்குதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிறுவனம் 1 மெகாவாட் சூரிய ஒளி மின்னாற்றல் பண்ணை ஒன்றை மதுரை அருகே தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. இப்பணி செப்டம்பர் மாதம் நிறைவுபெறும்.
திருநெல்வேலி அருகே சூரிய ஒளி பலகைகளைத் தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவி வருகிறது. இந்த ஆலை பி.வி. வேர்ல்ட்வைட் நிறுவனத்தின் தொழில்நுட்ப கூட்டுடன் உருவாகி வருகிறது. இந்த ஆலை மூலம் 25 மெகாவாட் மின் ஆலை உருவாக்கப்படும். இப்பணி இந்த ஆண்டு இறுதியில் நிறைவுபெறும். இது தவிர, சூரிய ஆற்றல் இன்காட்ஸ், சிலிகா குவார்ட்ஸ் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தி 2012-ல் தொடங்கும்.
இந்நிறுவனம் 350 மெகாவாட் சூரிய மின் ஆலை ஒன்றை ஸ்பெயினின் ஜெஸ்டாம்ப் நிறுவன ஒத்துழைப்புடன் தொடங்க உள்ளது.