பண்ருட்டி நூலாசிரியருக்கு விருது

பண்ருட்டி, ஜூன் 30: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள 14-வது புத்தக கண்காட்சியில், பண்ருட்டி முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆர்.பஞ்சவர்ணம் (படம்) சிறந்த நூலாசிரியருக்கான சான்றும், வி
பண்ருட்டி நூலாசிரியருக்கு விருது

பண்ருட்டி, ஜூன் 30: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள 14-வது புத்தக கண்காட்சியில், பண்ருட்டி முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆர்.பஞ்சவர்ணம் (படம்) சிறந்த நூலாசிரியருக்கான சான்றும், விருது பெறுகிறார்.

அவர் தொகுத்து எழுதிய "பிரபஞ்சங்களும் தாவரங்களும்' என்ற நூல் கண்காட்சியில் வெளியிடப்படவுள்ளது.

பண்ருட்டி காமராஜர் தெருவில் வசிப்பவர் ஆர்.பஞ்சவர்ணம். பி.யூ.சி. படித்து வேளாண் தொழிலை செய்து வந்தார். 1996 முதல் 2006 வரை 10 ஆண்டுகள் நகர்மன்றத் தலைவராக இருந்த காலத்தில் பண்ருட்டி நகராட்சி கணினிமயமாக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றதால். இதர நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது பல பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றது.

இவர் தொடர்ந்து 2005-2006-ல் மாநில திட்டக்குழு (குடிநீர் வடிகால்) உறுப்பினர், 2007-2008-ல் கோவை பாரதியார் பல்கலைக் கழக பாடக்குழு உறுப்பினர் (எம்.பி.ஏ), நிறுவனர்-தலைவர் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி கரும்பு விவசாயிகள் நிவாரணக் குழு மற்றும் நிறுவனர் தாவரத் தகவல் மையம் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்.தாவரங்கள் மீது அதிக பற்று கொண்டவர். தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் தீமைகளின் நிலை உணர்ந்து மரம் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி நகர பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மேலும் பொதுமக்கள் உணர வேண்டும் என்ற நோக்கில். முன்னோர்களின் சம்பிரதாயம், வழக்கம், மரபு படி திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயில்களில் ராசி, நட்சத்திரங்களுக்கு ஏற்ற தலமரங்களை உருவாக்கி அதன் மருத்துவ குணத்துடன் கல்வெட்டில் பதித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து இயற்கை வழிபடும் முறையை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் எழுதிய நூலில் தாவரங்களை இனம் கண்டு பெயர், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காணவும், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள் என அனைத்தையும் தொகுத்து அளித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தலைவர் தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் டி.மதிவாணன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன இயக்குநர் (சுரங்கம்) ஆகியோர் பங்கேற்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பஞ்சவர்ணத்துக்கு சான்றும், பரிசும் அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com