சிகிச்சை பெற்ற பிறகும் அரசு நிவாரணம்; ரூ.25 ஆயிரம் வரை பெற விதிமுறைகள் என்ன?

சென்னை, பிப்.11: சிகிச்சை பெற்ற பிறகும் தமிழக அரசிடம் இருந்து நிவாரண நிதியைப் பெறலாம். "மாநில நோயாளி நிதியுதவி அமைப்பின்' கீழ் சிகிச்சைக்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.  முத
Published on
Updated on
1 min read

சென்னை, பிப்.11: சிகிச்சை பெற்ற பிறகும் தமிழக அரசிடம் இருந்து நிவாரண நிதியைப் பெறலாம். "மாநில நோயாளி நிதியுதவி அமைப்பின்' கீழ் சிகிச்சைக்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

 முதல்வரின் புதிய விரிவான காப்பீட்டுத் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற பல்வேறு தரப்பினரும் விண்ணப்பித்து வருகின்றனர். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற உதவி கோரும் பட்சத்தில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநரிடம் மனு செய்ய வேண்டும்.

 ஏற்கெனவே சிகிச்சை முடிக்கப்பெற்று மருத்துவ நிதியுதவி கோரும் பட்சத்தில், அனைத்து ஆவணங்களையும் இணைத்து, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரிடம் விண்ணப்பிக்கலாம்.

 ஆவணங்கள் என்ன? சிகிச்சை முடிந்த பிறகு நிவாரண நிதி தேவைப்படும் பட்சத்தில் தமிழ்நாடு மாநில நோயாளி நிதியுதவி அமைப்பின் கீழ் நிதியைக் கோரலாம்.

 சிகிச்சைக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவியைப் பெற, உரிய அசல் மனுவை இணைக்க வேண்டும்.

 மேலும் அரசு அங்கீகரித்த தனியார் மருத்துவமனையின் டாக்டர் கையொப்பத்துடன் அந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது வழங்கப்படும் அறிக்கையின் அசலை சேர்க்க வேண்டும்.

 மேலும் மொத்த செலவுத்தொகைக்கான அசல் ரசீது மற்றும் மருத்துவமனை சீல், மருத்துவமனை டாக்டரின் கையெழுத்துடன் இணைக்க வேண்டும். குடும்பத் தலைவரின் பெயரில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து அசல் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரம்), ரேஷன் அட்டை நகல் ஆகியவற்றை இணைப்பது அவசியம்.

 மனு, மருத்துவச் சான்று, ரேஷன் அட்டை ஆகியவற்றில் முகவரி மாறுபட்டு இருக்கக் கூடாது. அனைத்துச் சான்றுகளும் ஓராண்டுக்கு உட்பட்டு, அசலாக இருக்க வேண்டும். அவற்றை இணைத்து அனுப்பும் பட்சத்தில் தமிழ்நாடு மாநில நோயாளி நிதி உதவி அமைப்பின் கீழ், சிகிச்சைக்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.