சென்னை, பிப்.11: மேல்மருவத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் மொத்தம் 3,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
÷இதில் இலவசமாக கண் புரை அறுவைச் சிகிச்சை செய்ய 1,137 (38 சதவீதம்) பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
÷இவர்களுக்கு கண்ணாடி அணியத் தேவையில்லாத வகையில் செயற்கை விழிலென்ஸ் ("ஐ.ஓ.எல்.-இண்ட்ராகுலர் லென்ஸ்') இலவசமாக பொருத்தப்படும்.
÷இந்த முகாமில் பரிசோதனை செய்யப்பட்டு, பார்வைக் குறைபாடு உள்ளது என கண்டறியப்பட்ட 1,000 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளன.
பங்காரு அடிகளாரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த முகாமில் பங்கேற்றோரை பங்காரு அடிகளார் சந்தித்து நலம் பெற வாழ்த்தினார். அப்போது ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவமனயின் நிர்வாக இயக்குநர் டாக்டர் த.ரமேஷ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ஜெ.மோகனசுந்தரம், டாக்டர் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.