Enable Javscript for better performance
கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்- Dinamani

சுடச்சுட

    

    கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

    By dn  |   Published on : 03rd December 2012 05:40 AM  |   அ+அ அ-   |    |  

     

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிசம்பர் 3) மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று அந்த தாழ்வுப் பகுதி தென் வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது.

    அடுத்த 48 மணி நேரத்துக்குள் அது தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கன்றன. இதனால் அடுத்த சில நாள்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    kattana sevai