சுடச்சுட

    
    nanjil

    மதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அந்தக் கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.

    அவர் கட்சியில் இணைந்த சில மணி நேரங்களிலேயே அவருக்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பை வழங்கி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.

    முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென சந்தித்தார் நாஞ்சில் சம்பத். அங்கு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.

    இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்த சில மணிநேரங்களிலேயே நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியது: இதுவரை கடலில் மழையாகப் பொழிந்து கொண்டு இருந்தேன். இப்போது கழனியில் மழையாகப் பொழிய உள்ளேன். இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது போன்று இப்போது உணர்கிறேன். வேதனை, வலி, துயரம், வம்பு, வழக்கு இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கை இன்றுமுதல் எனக்கு சாத்தியமாகும். இனி மதிமுக குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. எனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியது இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai