சுடச்சுட

  
  m-karunanidhi

  காவிரி நதி பாயும் பகுதிகளில் உள்ள மாநிலங்கள் காவிரி ஆணையத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த அவர் கூறியது:

  தமிழகமும், கர்நாடகமும் அண்டை மாநிலங்கள். இந்த இரண்டு மாநிலங்களும் நட்புணர்வோடு இருக்க வேண்டுமே அல்லாமல், தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பவன்.

  காவிரி நதி பாயும் பகுதிகளில் உள்ள மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசின் உதவியோடு உருவாக்கியதுதான் காவிரி நதி நீர் ஆணையம். அந்த ஆணையத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் தொடர்புடைய மாநிலங்கள் நடக்க வேண்டும். இது அப்போதே எடுத்த முடிவு. இந்த முடிவினை தக்க காரணங்கள் இல்லாமல் யாரும் மீறக் கூடாது என்றார் கருணாநிதி.

  உடல்நலம் குறித்து விளக்கம்: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை சேலம் மாவட்டத்தில் புரளி கிளம்பியது.

  மாதம்தோறும் கருணாநிதியின் நலம் தொடர்பாக இவ்வாறு புரளி கிளம்புவதால் முதலில் சாதாரணமாகவே இது எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் புதன்கிழமை அதிகாலையில் இருந்தே தமிழகம் முழுவதும் தீவிரமாகப் புரளி பரவியது.

  வதந்தி தொடர்பாகச் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறும்போது, சில விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னைப் பற்றிய வதந்திகளை உருவாக்கியுள்ளனர். அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றார் கருணாநிதி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai