சுடச்சுட

  

  40 மீனவர்களை விடுவிக்க இலங்கையை வலியுறுத்துங்கள்: ஜெயலலிதா

  By dn  |   Published on : 06th December 2012 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya1

  தமிழக மீனவர்கள் 40 பேரையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அவர்கள் மீது எந்த வழக்குகளும் இல்லாமல் படகுகளுடன் விடுவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

  இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

  பாக் ஜலசந்தி கடல் பகுதியில் ஐந்து இயந்திர படகுகளுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 18 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கடந்த 3-ம் தேதி அதிகாலை இலங்கையின் கிழக்கு கடல் பகுதியான புல்மோடை என்ற இடத்தில் 40 மீனவர்களையும் கைது செய்தது இலங்கை கடற்படை.

  இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவதும், அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்கள் எனக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது என்பதைக் குறிப்பிடுகிறேன்.

  தமிழகத்தில் கைது இல்லை: இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் இலங்கை படகுகள் மற்றும் மீனவர்களை காவல் படையினர் எச்சரித்து மட்டுமே அனுப்புகின்றனர்.

  இதுபோன்ற நல்லெண்ணத்தை வளர்க்கும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகளும் பின்பற்றிட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்களால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமும், கவலையும் அதிகரிக்கிறது. மேலும், மீனவ மக்களிடையே நிம்மதியில்லாத நிலை உருவாகிறது.

  எனவே, இந்தப் பிரச்னையில் எந்தவித வழக்குகளும் இல்லாமல் 40 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகுகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அதிகாரிகளை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai