மதுரை, திருவனந்தபுரத்துக்கு துரந்தோ ரயில்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கும்
மதுரை, திருவனந்தபுரத்துக்கு துரந்தோ ரயில்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கும் இயக்கப்படும் துரந்தோ அதிவேக விரைவு ரயிலை தமிழக முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் (பொறுப்பு) ஏ.கே.மிட்டல் செய்தியாளர்களிடம் கூறியது:

சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கும் புதிதாக துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று 2011- 2012-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் வழக்கமாக எழும்பூரிலிருந்து இயக்கப்படும். ஆனால், இந்த துரந்தோ ரயில்கள் பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு இந்த வழித்தடம் (சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல்) கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்றபோதும், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டே இந்த மாற்றுப் பாதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் பாதையில் துரந்தோ ரயில் இயக்கப்பட்டால் பயணிகள் அதிகாலையிலேயே மதுரை சென்றடைவர். இதனால் அவர்களுக்கு போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படும். இதன் காரணமாகவே சென்ட்ரல் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

வரும் காலங்களில், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மேலும் அதிக ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்றார் அவர். இந்தத் தொடக்க விழாவில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.கே.மிஸ்ரா, சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கட்டண விவரம்:
சென்னையிலிருந்து மதுரை மற்றும் திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் துரந்தோ ரயிலில் மொத்தம் 13 பெட்டிகள் இருக்கும். அனைத்தும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

இந்த ரயில் ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

துரந்தோ ரயில்ரயில் எண்நாள்நேரம்   (3ஏசி)2ஏசி1ஏசி

சென்னை - மதுரை22205திங்கள், புதன் 22.30ரூ. 690ரூ. 1,105ரூ. 1,995

மதுரை - சென்னை22206செவ்வாய், வியாழன்22.40ரூ. 690ரூ. 1,105ரூ. 1,995

சென்னை - திருவனந்தபுரம்22207 செவ்வாய், வெள்ளி 16.30ரூ.1,042 ரூ.1,595 ரூ.2,820

திருவனந்தபுரம் - சென்னை22208புதன், சனி21.40ரூ. 970ரூ.1,520ரூ. 2,710

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com