மதுரை ஆட்சியர் சகாயம் உள்பட 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை, மே 23: மதுரை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து அரசு தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு
மதுரை ஆட்சியர் சகாயம் உள்பட 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை, மே 23: மதுரை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 இதுகுறித்து அரசு தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:

 *  விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பியுள்ள முன்னாள் இணை தலைமை தேர்தல் அலுவலர் பூஜா குல்கர்ணி, சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 *  மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தனி அலுவலரான ஆர். நந்தகோபால், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இம் மாநகராட்சியின் ஆணையராக இருந்த நடராஜன் ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ளார்.

 *  மதுரை மாவட்ட ஆட்சியரான உ. சகாயம், பணியிட மாற்றம் செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸின் தனி அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 *  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரான அன்சுல் மிஸ்ரா அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 *  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தனி அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநரான டாக்டர் பிங்கேல் விஜய் மாருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 *  மத்திய அரசின் சுகாதாரத் துறையில் இணைச் செயலராக பணியாற்றி வந்த பிராஜ் கிஷோர் பிரசாத் மாநில அரசின் பணிக்குத் திரும்பியுள்ளார். அவர் இப்போது அரசு போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையில் அப் பதவியில் கூடுதல் பொறுப்பில் டி. பிராபாகர ராவ் இருந்து வந்தார்.

 *  தமிழக அரசின் தொல்லியல் துறை முதன்மைச் செயலரான சந்திரபிரகாஷ் சிங், மத்திய அரசின் பணிக்கு செல்கிறார். அவர் மத்திய உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் மருந்துகள் துறையின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 சந்திர பிரகாஷ் சிங்கின் பணியிடத்திற்கான புதிய செயலர் நியமனம் குறித்து தனி ஆணை வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com