Enable Javscript for better performance
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: நவம்பர் 3 முதல் முன்பதிவு - Dinamani

சுடச்சுட

    

    தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: நவம்பர் 3 முதல் முன்பதிவு

    By தினமணி  |   Published on : 02nd November 2012 03:52 AM  |   அ+அ அ-   |    |  

    train

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவை, நெல்லை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

    நாகர்கோவில்- சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் எண் 06748: நவம்பர் 11ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    ரயில் எண் 06747: நவம்பர் 12ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.35 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய இடங்களில் நின்றுச் செல்லும்.

    நெல்லை- சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (வழி: ஈரோடு, திருச்சி) எண் 06750: நவம்பர் 8ஆம் தேதி நெல்லையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 9.20 மணிக்கு வந்தடையும்.

    ரயில் எண் 06749: நவம்பர் 9ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய இடங்களில் நின்றுச் செல்லும்.

    கோவை- சென்னை சென்ட்ரல் - கோவை அதிவிரைவு சிறப்பு ரயில் 06618: நவம்பர் 13ஆம் தேதி கோவையில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    ரயில் எண் 06617: நவம்பர் 14ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும்.

    சென்னை சென்ட்ரல் - கோவை - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் எண் 06015 : நவம்பர் 11ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்றடையும்.

    ரயில் எண் 06016: நவம்பர் 12ஆம் தேதி கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (வழி: சென்னை எழும்பூர், விழுப்புரம், விருதாச்சலம்) சிறப்பு ரயில் எண் 06019 : நவம்பர் 10ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

    ரயில் எண் 06020: நவம்பர் 11ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    திருச்சி- சென்னை எழும்பூர் (வழி: விழுப்புரம், மயிலாடுதுறை) சிறப்பு ரயில் 06802: நவம்பர் 12ஆம் தேதி திருச்சியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 4.20 மணிக்கு வந்தடையும்.

    நவம்பர் 15ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (வழி-விழுப்புரம், மயிலாடுதுறை) சிறப்பு ரயில் எண் 06001: நவம்பர் 13ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    ரயில் எண் 06002: நவம்பர் 14ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (நவம்பர் 3) முதல் தொடங்குகிறது.

    kattana sevai