Enable Javscript for better performance
பேரவை வைர விழா: பிரணாப் பங்கேற்பு - Dinamani

சுடச்சுட

    

    பேரவை வைர விழா: பிரணாப் பங்கேற்பு

    By தினமணி  |   Published on : 02nd November 2012 04:01 AM  |   அ+அ அ-   |    |  

    pranab34

    தமிழக ஆளுநர் தலைமையில் சட்டப் பேரவை வைர விழா நடைபெறும்; விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பார் என்று முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்தார்.

    இது தொடர்பாக சட்டப் பேரவை விதி 110இன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு:

    தமிழ்நாடு சட்டப் பேரவை, இந்த ஆண்டு 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப் பேரவையின் வைர விழா, புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு சட்டப் பேரவை மண்டபத்தில் வரும் 30ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. வைர விழாவில், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அழைக்கும் வகையில் பேரவைத் தலைவர் பி.தனபால், நிதியைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு கடந்த மாதம் 26ஆம் தேதி தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரைச் சந்தித்து, எனது அழைப்புக் கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தது.

    எனது அழைப்பினை ஏற்றுக் கொண்டு வைர விழாவில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் தனது கடிதம் மூலம் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

    ஆளுநருடன் சந்திப்பு: விழாவுக்கு தலைமை தாங்குமாறு தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை ஆளுநர் மாளிகைக்குச் சென்று வியாழக்கிழமை நேரில் அழைப்பு விடுத்தேன். எனது அழைப்பை ஏற்று, ஆளுநரும் தலைமை தாங்க விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விழாவிலே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.

    kattana sevai