Enable Javscript for better performance
வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு நிலை: கனமழை பெய்ய வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு நிலை: கனமழை பெய்ய வாய்ப்பு

    By dn  |   Published on : 23rd November 2012 06:03 AM  |   அ+அ அ-   |    |  

    வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்தது. இருப்பினும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. வியாழக்கிழமை அது மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

    வலுவிழந்த போதிலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாநிலத்தின் பிற இடங்களிலும் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

    சாத்தனூர் அணை - 100; பாடலூர் - 60; சங்கராபுரம் - 50; தொழுதூர், திருவள்ளூர் - 30; திருச்சி மாவட்டம் துறையூர் - 20; கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு - 10.

    kattana sevai