Enable Javscript for better performance
தமிழகத்துக்கு காவிரி நீர்: பிரதமரிடம் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்துக்கு காவிரி நீர்: பிரதமரிடம் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

    By தினமணி  |   Published on : 12th October 2012 06:19 AM  |   அ+அ அ-   |    |  

    gkvasan

     ""தமிழகத்துக்கு வழங்குவதாக கர்நாடகம் ஒப்புக்கொண்ட நீரைப் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே வாசன் வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்தில் மத்திய அமைச்சர் வாசன் வியாழக்கிழமை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே. வாசன் கூறியது: டெல்டா மாவட்டங்களில் இரண்டரை லட்சம் ஹெக்டேருக்கு மேல் சம்பா சாகுபடி செய்து தண்ணீருக்காக தமிழக விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என்ற உண்மை நிலையை எடுத்துரைத்தேன்.

    இந்த ஆண்டு 50 சதவீதம் மழை குறைவாக உள்ளது. கர்நாடக அரசு தமிழக விவசாயிகளின் வயிற்றுப் பிரச்னையில் அலட்சிய போக்குடன் செயல்படுகிறது.  நியாயத்தின் அடிப்படையில் ஒப்புக் கொண்டபடி கர்நாடகம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

    தமிழக விவசாயிகளின் நிலையைப் பிரதமர் நன்கு அறிந்த காரணத்தால்தான் 9 ஆயிரம் கன அடி நீரை வழங்க வேண்டும் என்று காவிரி கூட்டத்தில் பிரதமர் உத்தரவிட்டிருந்தார் என்றும் வாசன் குறிப்பிட்டார்.

    kattana sevai