Enable Javscript for better performance
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

    By தினமணி  |   Published on : 12th October 2012 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் மூழ்கடித்தாக மீனவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

    ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை சுமார் 400 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் இரவோடு இரவாக பதற்றத்துடன் கரைகளுக்குத் திரும்பி வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியது:

    எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 3 போர்க் கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் எங்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு, கற்கள் மற்றும் காலி பாட்டில்களை படகுகள் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.

    பின்னர், ராமேசுவரத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, சரவணன், கணேசன் உள்ளிட்ட 5 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் புகுந்த கடற்படை வீரர்கள், வலைகளை வெட்டி கடலில் மூழ்கடித்தனர். இதனால் கரைக்குத் திரும்பி விட்டோம் என்று தெரிவித்தனர்.

    இந்தச் சம்பவத்தால் மீனவர்களுக்கு ஒரு படகுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

    kattana sevai