Enable Javscript for better performance
காவிரி: அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: ராமதாஸ் - Dinamani

சுடச்சுட

    

    காவிரி: அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: ராமதாஸ்

    By தினமணி  |   Published on : 13th October 2012 03:19 AM  |   அ+அ அ-   |    |  

    rama2

    காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

    இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காத கர்நாடக அரசு, இப்போது கண்காணிப்புக் குழுவின் ஆணையையும் ஏற்க மறுத்திருப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு மீண்டும் சவால் விடுத்திருக்கிறது.

    கர்நாடகம் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் மத்தியில் மத்திய அரசு கேலிப் பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே, கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு அரசியல்ரீதியான நெருக்கடிகளை தமிழகம் தர வேண்டும். இது பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    kattana sevai