Enable Javscript for better performance
காந்தியவாதி லகுமையா காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியுமான எல்.கே.பி. லகுமையா, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

     அவருக்கு வயது 100. அவருக்கு ராஜேந்திரன், ராமர் ஆகிய இரு மகன்களும், ராஜாத்தி என்ற மகளும் உள்ளனர்.

     காந்தியவாதியான இவர், 1946ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வந்த ரயிலை மறித்து காந்தியின் காலடிகள் சின்னாளப்பட்டி பகுதியில் பதிய காரணமாக இருந்தவர்.  சின்னாளப்பட்டி பேரூராட்சியின் தலைவராகவும், காந்தி கிராம நிறுவனத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

     காந்தி கிராம நிறுவனம் துவங்கப்பட்டபோது, தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் மற்றும் ரூ. 25 ஆயிரம் நிதியும், ஒரு வீட்டையும் தானமாக வழங்கினார்.

     லகுமையாவின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai