Enable Javscript for better performance
தமிழண்ணலுக்கு \\\"பாரிவேந்தர் பைந்தமிழ்\\\' விருது- Dinamani

சுடச்சுட

    

    தமிழண்ணலுக்கு "பாரிவேந்தர் பைந்தமிழ்' விருது

    Published on : 04th August 2013 02:19 AM  |   அ+அ அ-   |    |  

    pavanther

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தமிழ்ப் பேராயம் சார்பில் வழங்கப்படும் "பாரிவேந்தர் பைந்தமிழ்' விருதுக்கு தமிழறிஞர் தமிழண்ணல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்துவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 24-ல் நடைபெறும் விழாவில், தமிழ் பேரறிஞரும், வாழ்நாள் சாதனையாளருமான தமிழண்ணலுக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், பாராட்டுப் பட்டயமும் வழங்கி கெüரவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தரும், தமிழ்ப் பேராயம் தலைவருமான எம்.பொன்னவைக்கோ கூறினார்.

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான தமிழ்ப் பேராய விருதுகள் பெறுவோர் பட்டியலை எம்.பொன்னவைக்கோ வெளியிட, பல்கலைக்கழக வேந்தரும்,

    தமிழ்ப் பேராயம் புரவலருமான டி.ஆர்.பச்சமுத்து

    பெற்றுக் கொண்டார்.

    பின்னர் பொன்னவைக்கோ செய்தியாளர்களிடம் கூறியது:

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் பேராயம் அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் மற்றும் சாதனையாளர்களைத் தேர்வு செய்து மொத்தம் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பரிசு விருதும், பாராட்டுப் பட்டயமும் வழங்கி கெüரவித்து வருகிறோம். கடந்த ஆண்டு பாரிவேந்தர் பைந்தமிழ் விருது தமிழறிஞர் இளங்குமரனாருக்கு வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது "அறம்' நூலாசிரியர் ஜெயமோகனுக்கும், பாரதியார் கவிதை விருது "பெருநயப்புரைத்தல்' நூலாசிரியர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்துக்கும், அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெ.கருணாகரன், கொ.மா.கோதண்டம், கமலா கந்தசாமி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும்.

    ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது "அசடன்' நூலாசிரியர் எம்.ஏ.சுசீலாவுக்கும், பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது "நேனோ-அடுத்த புரட்சி' நூலாசிரியர் மோகன் சுந்தரராஜனுக்கும், ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது "இராஜராஜேச்சரம்' நூலாசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கும், முத்துத் தாண்டவர் தமிழிசை விருது "பண்ணும் இலயமும்' நூலாசிரியர் இ.அங்கயற்கண்ணிக்கும், வளர்தமிழ் விருது "திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்' நூலாசிரியர் க.ஜவகருக்கும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் தலா ரூ.1.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும். அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கான விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது "அமெரிக்கக்காரி' நூலாசிரியர் அ.முத்துலிங்கத்துக்கும் வழங்கப்படுகிறது.

    பரிதிமாற்கலைஞர் விருது கோவை ஞானிக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றார்.

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயம் புரவலருமான டி.ஆர்.பச்சமுத்து பேசும்போது, சிறந்த தமிழ் அறிஞர்களையும், நூலாசிரியர்களையும் கெüரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்ப் பேராயம் விருதுகள் வழங்கி கெüரவித்து வருகிறது. விருதுகளுக்கான நூலாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை நீதியரசர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளனர் என்றார்.

    தமிழ்ப் பேராயம் செயலர் பி.அபிபுல்லா, ஒருங்கிணைப்பாளர் பாக்யவதி ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp