பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியே சென்றது மங்கள்யான்

மங்கள்யான் விண்கலம் புவி ஈர்ப்புவிசையை விட்டு புதன்கிழமை அதிகாலை 1.14 மணிக்கு (டிசம்பர் 4) வெளியே சென்றுவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

மங்கள்யான் விண்கலம் புவி ஈர்ப்புவிசையை விட்டு புதன்கிழமை அதிகாலை 1.14 மணிக்கு (டிசம்பர் 4) வெளியே சென்றுவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 9.25 லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு புவி ஈர்ப்பு விசை இருக்கும். இந்தத் தூரத்தை புதன்கிழமை அதிகாலை மங்கள்யான் விண்கலம் கடந்துவிட்டது.

இந்தியா சார்பில் ஏவப்பட்டதில் சந்திரயான்தான் நீண்ட தொலைவு பயணித்த விண்கலம் ஆகும். ஆனால், அந்த விண்கலம் கூட புவி ஈர்ப்பு விசையை விட்டு வெளியேறவில்லை. இப்போது முதல்முறையாக மங்கள்யான் விண்கலம்தான் புவியின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியேறியுள்ளது என இஸ்ரோவின் தொலையுணர்வு மற்றும் அறிவியல் செயற்கைக்கோள்கள் தலைமைத் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

இப்போது செவ்வாய் கிரகத்தை நோக்கி சூரிய வட்டப்பாதையில் விண்கலம் சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள விசைகளுக்கு ஏற்ற வகையில் விண்கலத்தின் வேகம் கூடவோ, குறையவோ செய்யும். விண்கலம் இப்போதுவரை நல்ல நிலையில் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக டிசம்பர் 1-ஆம் தேதி அதிகாலை 12.49 மணிக்குச் செலுத்தப்பட்டது. மிக நீண்ட தொலைவில் செல்வதால் சிக்னல்கள் பரிமாற்றத்துக்காக விண்கலத்தில் உள்ள ஆன்டெனாக்கள் உடனடியாக இயக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் உள்ள கேன்பெரா, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கோல்டுஸ்டோன், ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் மற்றும் இந்தியாவில் பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையங்களின் மூலம் விண்கலத்தில் இருந்து சிக்னல்கள் பெறப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com