திமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுத்தாலும் ஏற்போம்

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுத்தாலும் ஏற்போம்

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

ஜனநாயகம், சமயச் சார்பின்மை, சமூக நீதி ஆகியவையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை. இதையே அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது. கேரளத்தில் காங்கிரஸýடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

பாஜகவை பொருத்தவரையில் அக்கட்சி எங்களுக்கு விரோதி கிடையாது. ஆனால், மோடி கிராம ராஜ்யம் பற்றி பேசுவதற்குப் பதிலாக, ராம ராஜ்யம் பற்றி பேசி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் அவர் எங்களிடம் இருந்து முரண்படுகிறார்.

திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரையில், அவர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக அறிவித்துவிட்டார். நட்பு என்றாலும் சரி, பகை என்றாலும் சரி அதில் தெளிவாக இருப்பவர் கருணாநிதி. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் 3-ஆவது அணி அமைய விரும்புகிறோம். நரேந்திர மோடியை கருணாநிதி பாராட்டினார் என்பதற்காக, அவர் பாஜகவுக்கு ஆதரவு தருவார் என்பதாக அர்த்தமில்லை.

தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். திமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்.

திருச்சியில் டிசம்பர் 28-ஆம் தேதி மஹல்லா ஜமா அத் மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் அறிஞர்கள், முஸ்லிம் கல்வி நிறுவன நிர்வாகிகள் அதில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் காதர் மொய்தீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com