சுடச்சுட

  

  திருவள்ளூர் அருகே ராமஞ்சேரியில் தனியார் பஸ் மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

  ராமஞ்சேரி அடுத்த கார்நிசாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மைனர் என்பவரின் மகன் பிரதீப் (16). அதே பகுதியைச் சேர்ந்த சொக்கு என்பவரின் மகன் வெங்கடேசன் (16).

  இருவரும் கனகம்மாசத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.

  இவர்கள் வியாழக்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த சைமன் என்பவருடன் கேஸ் சிலிண்டர் கொண்டு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் ராமஞ்சேரிக்கு சென்றனர்.

  ராமஞ்சேரி பைபாஸ் சாலை வளைவு அருகே மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பிரதீபும், வெங்கடேசனும் நின்றிருந்தனர். சைமன் சிலிண்டர் கொண்டு வரச் சென்றிருந்தார்.

  அப்போது தாம்பரத்தில் இருந்து திருத்தணிக்குச் சென்ற தனியார் பஸ், லாரியை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் பிரதீப், வெங்கடேசன் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

  பஸ் டிரைவர் அரக்கோணத்தைச் சேர்ந்த பாபு (40) தப்பி ஓடிவிட்டார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

  இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai