சுடச்சுட

  

  தருமபுரி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

  சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ.சௌந்தரராஜன் (பெரம்பூர்) பேசியது:

  பிரச்னை நடைபெறும் இடத்துக்கு நகர்ப்புறங்களில் 3-லிருந்து 5 நிமிஷங்களுக்குள்ளும், கிராமப்புறங்களில் 8 நிமிஷங்களுக்கும் காவல்துறை செல்ல முடியும் எனச் சொல்லப்படுகிறது.

  ஆனால் தருமபுரியில் கலவரம் நடைபெற்றபோது அந்த இடத்துக்கு மிகத் தாமதமாகவே காவல்துறையினர் சென்றுள்ளனர். இந்தக் கலவரம் தொடர்பாக 19 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

  உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்: தவறான தகவல். காவல்துறை 5 நிமிஷங்களுக்குள்ளேயே சென்றுவிட்டனர். இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: தருமபுரி கலவரம் தொடர்பாக முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை.

  அ.சௌந்தரராஜன்: சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன் வரவேண்டும். இந்தத் திட்டம் மூலம் அந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்பு பெருகும். ஜாதி மோதல்கள் குறைவதற்கும் வாய்ப்பாக அமையும்.

  தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர்.

  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக ஆட்சியில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்பது உண்மையில்லை. கொலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 5.1 சதவீதம் கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதிமுக ஆட்சியில் 3.3 சதவீதம் எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai