சுடச்சுட

  

  மதுரைக்குள் நுழைவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸýக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்காததைக் கண்டித்து பாமக உறுப்பினர்கள் பேரவையில் வெளிநடப்பு செய்தனர்.

  பாமக உறுப்பினர் ஏ.கணேஷ்குமார் (செஞ்சி) அரிசி விலையேற்றம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை போன்ற விவகாரங்கள் தொடர்பாகப் பேசினார்.

  அதன் பின் தருமபுரி விவகாரம் தொடர்பாகவும் மதுரைக்குள் ராமதாஸ் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாகவும் பேச முயற்பட்டார். அதற்கு பேரவைத் தலைவர் ப.தனபால் அனுமதிக்கவில்லை.

  அதனையடுத்து பாமக உறுப்பினர்கள் கணேஷ்குமார், கலையரசு ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பேரவை பாமக தலைவர் குரு வியாழக்கிழமை பேரவைக்கு வரவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai