சுடச்சுட

  

  மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 220 மெகாவாட் மின் உற்பத்தி

  By dn  |   Published on : 08th February 2013 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலம் மாவட்டம், மேட்டூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

  மேட்டூர் அனல் மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை பர்னஸ் ஆயில் மூலம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

  பின்னர், வியாழக்கிழமை அதிகாலையில் இருந்து நிலக்கரி மூலம் மின் உற்பத்தி தொடங்கியது. இதையடுத்து, வியாழக்கிழமை பகலில் மட்டும் 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இந்த மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி கலன்கள் 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டது. எனினும், படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமைக்குள் 400 மெகாவாட் மின் உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி நடைபெறுவதாகவும், நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவானால், தொடர்ந்து 400 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai