சுடச்சுட

  

  ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி புதிய கட்டடம்: ஆளுநர் திறந்து வைத்தார்

  By dn  |   Published on : 08th February 2013 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  inag

  திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் புதிய கட்டடத்தை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

  ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் புதிதாக நிர்வாக அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

  இதன் திறப்பு விழாவுக்கு கல்லூரித் தலைவர் கே.சி.வாசுதேவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக ஆளுநர் கே.ரோசய்யா புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

  செயலாளர் எத்திராஜுலு, பொருளாளர் தாமோதிரன் மற்றும் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

  முன்னதாக கல்லூரி வளாகத்துக்கு வந்த ஆளுநரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கே.வீரராகவராவ், எஸ்.பி. ரூபேஷ்குமார் மீனா ஆகியோர் வரவேற்றனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு டி.எஸ்.பி.க்கள் பாலச்சந்திரன், பாரதி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai