Enable Javscript for better performance
காந்தியவாதி சங்கரலிங்கம் ஜெகநாதன் மறைவு- Dinamani

சுடச்சுட

    

    காந்தியவாதி சங்கரலிங்கம் ஜெகநாதன் மறைவு

    By dn  |   Published on : 13th February 2013 02:16 AM  |   அ+அ அ-   |    |  

    முதுபெரும் காந்தியவாதி சங்கரலிங்கம் ஜெகநாதன் (99), திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி காலமானார்.

    மகாத்மா காந்தி, வினோபாபாவே ஆகியோருடன் நெருங்கிப் பழகிய இவர்,  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அடுத்துள்ள செங்கற்படை கிராமத்தில் 1914இல் பிறந்தவர்.

    வினோபாபாவே நடத்திய பூமிதான இயக்கத்தில் சேர்ந்து, தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும், பிகார் மாநிலத்தில் 23 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் தானமாகப் பெற்று, ஏழைகளுக்கு வழங்கிய பெருமை இவருக்கு உண்டு.

    காந்திய வழியில் சேவை ஆற்றிய இவருக்கு, சுவாமி பிரணவானந்தா அமைதி விருது (1987), ஜமுனாலால் பஜாஜ் அமைதி விருது (1988), பகவான் மகாவீரர் விருது (1996), நோபல் பரிசுக்கு இணையான "ரைட் லைவ்லி குட்' விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன.

    இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    அன்னாரின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு காந்திகிராமத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 8675976655.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai