Enable Javscript for better performance
பாமக - விடுதலைச் சிறுத்தைகள் மோதல்- Dinamani

சுடச்சுட

    

    பாமக - விடுதலைச் சிறுத்தைகள் மோதல்

    By dn  |   Published on : 28th January 2013 03:12 AM  |   அ+அ அ-   |    |  

    clash

    பாமக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இடையே தியாகராய நகரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மோதலில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

    இந்த மோதலில் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்த விவரம்:

    பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டம் தியாகராய நகர் சிவாஜிகணேசன் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தின் காரணமாக அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்க உதவி ஆணையர் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    கூட்டம் தொடங்குவதற்கு முன் அப் பகுதிக்கு காலை 11.30 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், திராவிடர் விடுதலைக் கழகத்தினரும் திடீர் என்று திரண்டு வந்தனர்.

    டாக்டர் ராமதாஸின் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடி கோஷங்களை எழுப்பினர். அவர்களை கூட்டம் நடைபெறும் மண்டபம் பகுதிக்கு செல்லவிடாமல் போலீஸார் சாலையின் நடுவே தடுப்புகளை போட்டனர். இதனையறிந்து மண்டபத்தில் இருந்த பாமக நிர்வாகிகளும் தொண்டர்களும் வெளியில் வந்தனர். எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தும் இடத்தை நோக்கி பாமகவினரும் எதிர்த்து கோஷமிட்டபடி வந்தனர்.

    உடனே காவல்துறையைச் சேர்ந்த சிலர் பாமகவினரைச் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நேரத்தில் திடீரென கூட்டத்திலிருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் மணிபாரதி என்ற போலீஸ்காரரின் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் விரைந்து வந்து பா.ம.க.வினரைச் சமாதானப்படுத்தி மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி, திராவிடர் விடுதலை கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸார் வேனில் ஏற்றி வேறு மண்டபத்தில் தங்கவைத்து, பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

    இந்தச் சம்பவம் நடைபெற்றபோது பாமக நிறுவனர் ராமதாஸ் அங்கு இல்லை. அதன் பின்னர்தான் அவர் அங்கு வந்து கூட்டத்தில் பங்கேற்றார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp