சுடச்சுட

    

    அரபு நாடுகளில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்

    By dn  |   Published on : 28th June 2013 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karunidhi

    அரபு நாடுகளில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    சவூதி அரேபியாவில் நிதாகத் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    இதனால் வெளி நாட்டினரைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை சவூதி அரசு தொடங்கியுள்ளது.

    வரும் ஜூலை 3-ஆம் தேதிக்குள் 60 ஆயிரம் இந்தியர்கள், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள்.

    அதைப் போலவே குவைத் நாட்டில் பணிபுரியும் 1.20 லட்சம் தமிழர்களில் பலர் வெளியேற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது. அந்த நாடுகளில் பணியாற்றும் தமிழர்கள் பல்லாண்டு காலமாக தங்கள் குடும்பத்தோடு அங்கே குடியேறி அந்த நாடுகளோடு ஐக்கியமாகி விட்டவர்கள்.

    அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்று விரும்புகின்றனர்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, அவர்கள் தொடர்ந்து அந்த நாடுகளில் வாழவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai