Enable Javscript for better performance
காஷ்மீரிகள், தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை - Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீரிகள், தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை

    By dn  |   Published on : 19th May 2013 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yas

    இன விடுதலைக்கான போராட்டத்தில் காஷ்மீரிகள் மற்றும் தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை என்றார் பிரிவினைவாதத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற இன எழுச்சிக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:

    நார்வே அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்ற அதே சமயத்தில், இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை மூலம் அங்கு லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே, அனுமதிபெற்று இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதிகாலை நேரத்தில் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயல்.

    தமிழர்கள் தனித்து இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நம்முடைய போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை. தமிழர்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்றார் யாசின் மாலிக்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai